கீழக்கரை அருகே மதுபோதையில் இளைஞர் கொடூர கொலை…..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சின்ன மாயாகுளத்தை சேர்ந்த அருள்மணி மகன் எடிசன் 23 என்பவர்  இரவு நண்பர்களுடன் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி எதிரில் உள்ள கருவை காட்டிற்குள் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்துள்ளனர். பின்பு அவர்களுக்கு இடையே வாக்குவாதம் காரணமாக எடிசன் என்பவரை அவரது கூட்டாளிகள் கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பித்து ஓடியுள்ளனர்.

இது சம்பந்தமாக காலை 9 மணி அளவில் காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து கீழக்கரை துணை கண்காணிப்பாளர் முருகேசன் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரனையை தொடங்கினார். பின்பு இராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் வருண் குமார் IPS சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினர். தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். பின்பு ஏர்வாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரேதத்தை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

எடிசன் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழக்கரை காவல் நிலையத்திலும் ஏர்வாடி காவல் நிலையத்திலும் அடிதடி வழக்கு பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு

உதவிக்கரம் நீட்டுங்கள்..