திண்டுக்கல் அருகே கணவன் மனைவி வெட்டி கொலை..

திண்டுக்கல் நல்லாம்பட்டி நெசவாளர் காலனியில் உள்ள சகலை வீட்டில் பாறைபட்டியை சேர்ந்த பாண்டி என்ற திருப்பூர் பாண்டி அவரது மனைவி பஞ்சவர்ணம் ஆகிய இருவரையும் நாட்டு வெடிகுண்டு வீசி நிலைகுலையச் செய்து அரிவாளால் வெட்டி இருவரையும் படுகொலை செய்துள்ளனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் ஏடிஎஸ்பி சுகாசினி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். பட்டப்பகலில் கணவன், மனைவியை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.