தொண்டி அருகே மீனவர் கொலை… சகோதரருக்கு வலை வீச்சு..

இராமநாதபுரம் மாவட்டம்  தொண்டி அருகே நம்புதாளை பகுதியைச் சேர்ந்த மீனவர் சுப்ரமணியன்,52. இவரது தம்பி நாகூர் கனி,38. சுப்ரமணியனை, கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இக்கொலை சம்பவம் தொடர்பாக தலைமறைவான நாகூர் கனியை தொண்டி போலீசார் தேடி வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.