உசிலம்பட்டி அருகே பொங்கல் பரிசுதொகை ஆயிரம் ரூபாயை தராததால் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை..

உசிலம்பட்டி அருகே பொங்கல் பரிசுதொகை ஆயிரம் ரூபாயை தராததால் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கனவன் ராமர்(70) போலிசில் சரணடைந்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை 8 வார்டைச் சேர்ந்த மாரிமத்துமகன் ராமர் (70). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராசாத்தி (65). தமிழக அரசால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பொங்கல் பரிசுத்தொகையான ஆயிரம் ரூபாயை நேற்று ராசாத்தி வாங்கி வந்தார். இந்நிலையில் வாங்கி வந்த ஆயிரம் ரூபாய் பணத்தை கடன்வாங்கிய நபர் வாங்கிவிட்டு சென்றார். இதனால் ராமர் என்பவருக்கு பங்கை தராததால் வாக்குவாதம் ஏற்பட்டது. ராசாத்தியிடம் அந்த ஆயிரம் ரூபாய் பணத்தை கேட்டு மனைவிடம் தகறாரில் ஈடுபட்டார். இந்நிலையில் தகறாரில் ஈடுபட்ட ராமர் கையில் இருந்த அரிவாளால் ராசாத்தியை கழுத்தை அறுத்து கொலை செய்தார்.இதில் சம்பவஇடத்திலேயே ராசாத்தி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த எழுமலை போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று ராசாத்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் கொலை செய்த கனவர் ராமர் போலிசில் சரணடைந்தார். அவர் மீது எழுமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசு பொங்கல் பரிசு தொகை 1000 இலவசம் என்ற பெயரில் பாமரமக்களை கொலையாளிகளாக மாற்றிவருவது குறிப்பிடதக்கது.

செய்தி:- மோகன், உசிலம்பட்டி