Home செய்திகள் விருதுநகர் அருகே, போதை தகராறில் வாலிபரை கொன்று கிணற்றில் வீசிய, 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது…..

விருதுநகர் அருகே, போதை தகராறில் வாலிபரை கொன்று கிணற்றில் வீசிய, 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது…..

by ஆசிரியர்

விருதுநகர் அருகேயுள்ள ஓ.கோவில்பட்டி, ஆர்.சி. தெரு பகுதியைச் சேர்ந்த ஆத்தியப்பன் (33) என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கட்டனார்பட்டியில் உள்ள கிணற்றில் மூடையாக கட்டி வீசப்பட்டிருந்தது. ஆத்தியப்பன் உடலை, வச்சக்காரப்பட்டி காவல்நிலைய போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையில் ஆத்தியப்பன் வசித்து வந்த தெருவில் வசிக்கும் மாரீஸ்வரன் (24), இவரது தம்பி ஜெகதீசன் (19), மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் (19) மற்றும் 2 சிறுவர்களுடன் ஆத்தியப்பனுக்கு போதை பழக்கம் இருந்து வந்ததாகவும், ஒரு நாள் போதையில் இருந்த ஆத்தியப்பன், மாரீஸ்வரனின் தந்தையை தான் கொலை செய்ததாக கூறியுள்ளார். இதனை கேட்ட மாரீஸ்வரன், அவரது தம்பி மற்றும் நண்பர்கள் சேர்ந்து, ஆத்தியப்பனை பழி தீர்ப்பதற்காக காத்திருந்து கடந்த 25ம் தேதி மது குடிக்கலாம் என்று கூறி அவரை அழைத்துச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து அவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தனர்.

பின்னர் அவரது உடலை சாக்கு மூடையில் கட்டி கிணற்றில் வீசியது போலீசார் விசாரணையில் தெரிந்தது. இதனையடுத்து சம்பவத்தில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உட்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். வாலிபர் கொலை சம்பவத்தை விரைவாக விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள் பாராட்டு தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com