குப்பையில்லா நகராட்சி, ப்ளாஸ்டிக் இல்லா நகராட்சி – கழிவுகள் கையாள்வது பற்றிய விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்…

கீழக்கரை நகராட்சியில் இன்று (31-05-2017) காலை 11.00 மணியளவில் கீழக்கரை திடக்கழிவு மேலான்மை மற்றும் கையாளுதல் விதிகள் 2016ன் படி அத்திட்டங்களை செயல்படுத்தும் வழிமுறைகளைப் பற்றி கீழக்கரையில் உள்ள வர்த்தக உரிமையாளர்களுடன் விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குப்பைகளை பிரித்தளித்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விதிமுறைகள் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டம் கீழக்கரை ஆணையர் M.R.வசந்தி தலைமையிலும், தலைமை எழுத்தர் சந்திரசேகர் முன்னிலையிலும், வர்த்தக சங்க செயலர் ரோட்டரி சுப்பிரமணியன் அவர்களால் தொடங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் திடக்கழிவு விதிகள் பற்றியும், நகரின் தூய்மையை பேண பொதுமக்கள் ப்ளாஸ்டிக் ஒழித்தல் மற்றும் குப்பைகளை எவ்வாறு தவிர்க்க வேண்டும் என்ற வழிமுறைகளும் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தை நகராட்சியின் துப்புரவு ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.