சாலையை கடக்க முயன்ற 70 வயது மூதாட்டி மீது தனியார் மில் வாகனம் மோதி விபத்து

இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் முன்பு சாலையை கடக்க முயன்ற 70 வயது மூதாட்டி மீது தனியார் மில் வாகனம் மோதி விபத்து சம்பவ இடத்திலே பலி வடக்கு காவல் நிலைய போலிசார் விசாரணைவிருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊரணி பட்டி தெருவைச் சேர்ந்த சின்ன மாடகண்ணு மனைவி சமுத்திரம் வயது 70 பழைய பேருந்து நிலையம் அருகே சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த தனியார் நூற்பஆலை பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் சமுத்திரம் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார் இந்த விபத்து குறித்து இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் பேருந்து ஓட்டிய தேவதானம் பகுதியை சேர்ந்த டிரைவர் முத்துக்குமாரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்இறந்த சமுத்திரத்தின் உடலை கைப்பற்றி இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் இச்சம்பவத்தால் இராஜபாளையம் Toதென்காசி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்