Home செய்திகள் வடிவேல் கரை ஊராட்சியில் முறையான பாதை வசதி இல்லாததால் விவசாய நிலங்கள் தரிசாக மாறும் அவலம் வசதி செய்து தர மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கை

வடிவேல் கரை ஊராட்சியில் முறையான பாதை வசதி இல்லாததால் விவசாய நிலங்கள் தரிசாக மாறும் அவலம் வசதி செய்து தர மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கை

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் வடிவேல்கரை ஊராட்சியில் மதுரை போடி ரயில்வே பாதைக்கு அடியில் அண்டர் பாஸ் பாலம் ஒன்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அப்போது இப்பகுதி விவசாயிகள் பாலம் கட்டினால் விவசாய நிலங்களுக்குச் செல்லமுடியாமல் விவசாய நிலங்கள் தரிசாக மாறும் என அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினர் ஆனால் மாற்றுப்பாதை உங்களுக்கு செய்து தருகிறோம் என்று கூறி பாலத்தை கட்டினர். தற்போது அந்த பாலத்தில் தண்ணீர் தேங்கி பயன்படுத்த முடியாமல் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இப்பகுதியிலுள்ள வடிவேல்கரை, புதுக்குளம், விளாச்சேரி, கிளானேரி நாகமலை புதுக்கோட்டை உள்ளிட்ட கிராம பொதுமக்கள் இப்பாதையை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது விவசாய பணிகளுக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ள சூழ்நிலையில் அவர்கள் தங்கள் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். கடந்த ஆண்டில் இதேபோல காலகட்டத்தில் நெல் விவசாயம் அறுவடை செய்து முறையான பாதை வசதி இல்லாததால் அதை வாகனத்தில் ஏற்ற முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். அதேபோல அண்டர் பாஸ் பாலத்தில் தண்ணீர் முழுவதுமாக தேங்கி உள்ளதால் பாலத்தை கடக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர் எனவே நோய் தொற்று ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் விரைந்து நடவடிக்கை எடுத்து மக்களுக்கு பொதுப் பாதை முறையாக அமைத்து தர கோரிக்கை விடுக்கின்றனர் இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும் தாலுகா நிர்வாகத்திற்கும் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக மத்திய மாநில அரசுகள் இதன் தீவிரத்தை உணர்ந்து விவசாய நிலங்க தரிசாக மாறும் அவலத்தை தடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com