Home செய்திகள்கீழக்கரை செய்திகள் முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “21st CENTURY TEACHING SKILLS” தலைப்பில் நடைபெற்ற இணையவழி சர்வதேசப் பயிலரங்கம் நிழகழ்ச்சி…

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “21st CENTURY TEACHING SKILLS” தலைப்பில் நடைபெற்ற இணையவழி சர்வதேசப் பயிலரங்கம் நிழகழ்ச்சி…

by ஆசிரியர்

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ” 21st CENTURY TEACHING SKILL ” என்னும் தலைப்பில் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கான மூன்று நாள் சர்வதேச பயிலரங்கம் 17/06/2020 முதல் தெடங்கி 19/06/2020 வரை நடைபெற்றது.

இந்த பயிலரங்கம் அரபித்துறை துறைத் தலைவர் M. ரெய்ஹானத்தில் அதவியா இறைவணக்கத்துடன் தொடங்கியது.  இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் Dr. A. R. நாதிராபானு கமால் “ஒரு தலைவனின் கடமை” தனக்குக்கீழ் உள்ளவர்களின் தனித்திறமையைக் கண்டறிந்து வெளிக்கொண்டு வருவதில்தான் உள்ளது. ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு தலைவர்தான். தன் கீழுள்ள மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொணர்ந்து அவனையும் ஒரு நல்லத் தலைவனாக உருவாக்க வேண்டும். மாற்றத்தை விரும்புகிறவர்கள் தானாக முன்வந்து மாற்றத்தை உருவாக்க வேண்டும் போன்ற பல கருத்துக்களை எடுத்துக்கூறி தொடக்கவுரையாற்றிப் பயிலரங்கிணை தொடங்கி வைத்தார்.

அவரைத்தொடர்ந்து தகவல் தொழில்நுட்பத்துறை துறைத்தலைவர் P.பிரியங்கா அனைவரையும் வரவேற்கும் விதமாக வரவேற்புரை நிகழ்த்தினார்.  சிறப்புப் பேச்சாளர் Atiya Bansal, Writer, Teacher and Teacher Trainer, Director of Alef Academy, CEO Alef Complementary Education Service Ltd (ACES), Hong Kong, 21-ம் நூற்றாண்டில் கற்பிக்கும் திறன் குறித்துப் பல்வேறு கருத்துக்களைத் தொகுத்து, மூன்று அமர்வுகளாக வழங்கினார்.

முதல் அமர்வில் கற்பித்தலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் குறித்தம், கற்பிக்கும் களங்கள் குறித்தும், புளுமின் வகைப்பாட்டியல் மற்றும் மேல்நோக்கு சிந்தனை குறித்தும் எடுத்துரைத்தார்.

இரண்டாவது அமர்வில் ஆழ்ந்த சிந்தனை, மாபெரும் அறிவுசார் திறன்கள் குறித்தும், மூன்றாவது அமர்வில் கதைசொல்லி மாணவர்களின் படைப்பாற்றலை உருவாக்கும் விதம் குறித்தும் எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினார்.

மூன்று நாட்கள் நடைபெற்றப் பயிலரங்கில் தினமும் 215 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டனர். இந்தியா மட்டுமல்லாது உலகளவில் (சவுதி, அமெரிக்க, கத்தார், ரஷ்யா, லண்டன்) போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியாகத் தகவல் தொழில் நுட்பத்துறைப் பேராசிரியர் K. ரோஜினா பர்வீன் நன்றியுரை வழங்கியதுடன் இப்பயிலரங்கம் நிறைவு பெற்றது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!