முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 12.02.19 அன்று 03.00மணி அளவில் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியினை வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறையைச் சார்ந்த முதலாமாண்டு மாணவி s.ஃபாரீகா பர்வீன் இறைவணக்கத்துடன் தொடங்கி வைத்தார்.

அதனைத்  கல்லூரி முதல்வர் Dr. A.R.நாதிரா பானு கமால் பெண்கள் ஏன் வேலைக்கு போகவேண்டும்?? ஏற்பதற்கான முக்கியத்துவத்தையும், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நடைபெறும் சிறப்பு பயிற்சி வகுப்புகளை பற்றியும் மாணவிகளுக்கு எடுத்துரைத்து தலைமையுரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்  M.கருணாகரன், மாவட்ட துணை வேலைவாய்ப்பு அலுவலர், இராமநாதபுரம் மாணவிகளுக்கு இரயில்வே தொடர்பான பணி விபரங்களை சிறப்பாக எடுத்துரைத்து மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றினார்.

நிகழ்வின் இறுதியாக ஆங்கிலத் துறைத் தலைவர் K.மெஹருன்னிஷா நன்றியுரை வழங்க இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.