Home செய்திகள் கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரி 30ம் ஆண்டு பட்டமளிப்பு விழா..

கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரி 30ம் ஆண்டு பட்டமளிப்பு விழா..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரி 30ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.  பல்கலை அளவில் ரேங்க் பிடித்த 23 பேர், 370 இளங்கலை, 104 முதுகலை பட்டதாரிகளுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா பட்டம் வழங்கினார். அவர் பேசுகையில், “விஞ்ஞானம், தொழில் நுட்பம் துறைகளில் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.  நாசா விண்வெளியிலும் கூட இந்தியர்கள் முன்னணியில் உள்ளனர்.

‘சிலிகான்’ மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் இந்தியர்கள் அதிகளவில் சாதனையாளர்களாக திகழ்கின்றனர். புதிய தொழில் நுட்பங்கள் கற்று கல்லூரிகளில் இருந்து வெளியேறும் பொறியியல் பட்டதாரிகள் மேலும் புதியவைகளை கண்டறிய வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்வதும் திறமையை நிறுத்திக்கொள்ளாமல் தற்போதைய சூழ்நிலைகளை சமாளிக்கும் வல்லுநர்களாக மாறவேண்டும். தூய்மை, நேர்மை மற்றும் மனிதநேய பண்புகளை கடைபிடித்தால் வாழ்வில் உயர்ந்த இடத்திற்கு வரலாம். குறுக்கு வழியில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை விட்டொழிக்க வேண்டும். உலக நாடுகளில் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற உறுதிமொழி பட்டதாரிகள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். அரசு வேலையை மட்டும் நம்பாமல் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்முனைவோரக மாற வேண்டும்” என பேசினார்.

முகமது சதக் பொறியியல் கல்லூரி சேர்மன் முகமது யூசுப், செயலர் ஷர்மிளா, முகமது சதக் பொறியியல் கல்லூரி டீன் முகமது ஜகாபர், முதல்வர் அப்பாஸ் மைதீன், கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ரஜபுதீன், பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன், இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகிர் பெண்கள் கல்லூரி முதல்வர் நாதிரா பானு, செயல் இயக்குநர் ஹமீது இபுராஹீம் உள்பட பலர் பங்கேற்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!