இராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில அறிவுத்திறன் மற்றும் ஆங்கில புலமை மேம்படுத்துதல் போட்டி…

இராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கிடையே, அவர்களின் ஆங்கில அறிவுத்திறன் மற்றும் ஆங்கிலத்தில் புலமையாக பேசுதலுக்கான போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றி 38 பெற்ற மாணவர்களுக்கு பிளாட்டினம் கார்டு, கோல்டன் கார்டு மற்றும் சில்வர் கார்டுகள் பள்ளி முதல்வர் திரு.எஸ்.நந்தகோபால் அவர்களால் வழங்கப்பட்டது.

மேலும் மாணவர்களின் ஆங்கில புலமையை வளர்ப்பதற்கு தினந்தோறும் ஒரு வகுப்புக்கு மாலை 3.45 முதல் 15 நிமிடத்திற்கு மாணவர்களுக்கிடையில் ஆங்கிலத்தில் கருத்து பரிமாற்றம் செய்து, பதில் கூறும் வழக்கத்தை செயல்முறை படித்து வருகின்றனர். இதனை மாணவர்களின் பெற்றோர்கள் மிகவும் வரவேற்றனர்.