கொரானா தடுப்பு நடவடிக்கையை துரிதப்படுத்த ராமநாதபுரம் ஆட்சியரிடம் , நாடாளுமன்ற உறுப்பினர் மனு..

மத சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவை இன்று (10.7.2020) சந்தித்து அளித்த மனு அளித்தார். அம்மனுவில் மாவட்ட முழுவதும் கொரானா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தவேண்டும், ராமநாதபுரம், பரமக்குடி நகராட்சிகளில் கொரானா தடுப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும். ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கொரானா வார்டு செவிலியருக்கு முகக்கவசம், கையுறை, பாதுகாப்பு உடை வழங்கி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கொரானா சோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கையுடன் வழங்கினார்.

அவருடன் மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் எம்எஸ்ஏ ஷாஜஹான், மாவட்ட ஊராட்சி தலைவர் திசை வீரன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம். தெய்வேந்திரன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் முருகபூபதி, மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக., பொறுப்பாளர் ஜீவானந்தம் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்றனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..