இன்று எத்தனையோ இளைஞர்கள் தன் குடும்ப தேவைகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று பொருளாதாரம் தேட செல்கிறார்கள். பின்னர் ஒரு காலகட்டத்தில் ஊரிலேயே தொழில் தொடங்கும் எண்ணத்துடன் தொழில் தொடங்கி வெற்றியும் காண்கிறார்கள், அதில் அதிகமானோர் சரியான வழிகாட்டுதல் இல்லாமலும், ஊரில் உள்ளவர்களின் முழுமையான ஒத்துழைப்பும் இல்லாமையால் கனவுகள் கானல் நீராகி மீண்டும் வெளிநாட்டு வாழ்கைக்கே திரும்பி விடுகிறார்கள்.
ஆனால் ஊரில் சமீபத்தில் TRAVEL ZONE நிறுவனத்தில் நடைபெற்ற சம்பவத்தை அந்நிறுவனத்தின் நிறுவனர் SKV.சேக் கூறியது, அச்சம்பவத்தில் ஊக்கப்படுத்தியது போல் ஒவ்வொருவரும் இருந்தால் நிச்சயமாக சுயதொழில் செய்யும் இளைஞர்களும் வெற்றியாளராக மாறுவார்கள் என்பதில் ஐயமில்லை.
TRAVEL ZONE நிறுவனர் SKV.சேக் அச்சம்பவத்தை பற்றி கூறியதாவது, “எனது அலுவலகதிற்குத் துபாயில் மேலாளராக பணிபுரிய கூடிய ஒரு நண்பர் விமான டிக்கெட் பதிவு செய்ய வந்திருந்தார், ஆனால் அச்சமயம் இணைய தளத்தில் சில பிரச்சினைகள் இருந்ததால் பதிவு செய்ய தாமதமாகியுது. அதனால் அவரை தாமதப்படுத்த விரும்பாமல், ஏன் நீங்கள் மொபைல் ஆப்ஸ் அல்லது வேறு e-commerce (Paytm, Makemytrip, Cleartip, ect.) தளங்களில் பதிவு செய்யக்கூடாது என்று கேட்டேன்.
ஆனால் அவர் கூறிய பதில் என்னை மிகவும் பாதித்தது மட்டுமல்லாமல், என்னை சிந்திக்கவும் தூண்டியது, நான் செய்யும் தொழில் மீது ஒரு ஆர்வத்தையும் உண்டாக்கியது. அவர் கூறினார், “எனக்கு தெரியாதா? ஆப்ஸ் அல்லது வேறு தளத்தில் (e-commerce site) டிக்கெட் புக்கிங் செய்ய.? அதனால் கண்ணுக்கு தெரியாத எவனோ ஓருத்தனுக்கு லாபமும் வருமானமும் போய் சேரும், நாங்கள் உங்களை போன்று ஊரிலேயே சுய தொழில் புரிபவர்களை நாடினால், அது உங்களுக்கும் லாபம், உங்களை போன்று தொழில் புரிபவர்களுக்கும் உற்சாகத்தையும், ஆவலையும் ஏற்படுத்தும்” என்று சொன்னது, நிஜமாகவே என்னை சிந்திக்க வைத்தது” என்றார்.
இது போன்று ஒவ்வொருவரும் சிந்திக்க ஆரம்பித்தால் நிச்சயமாக ஊரில் சுய தொழில் தொடங்குபவர்களுக்கு பெரிய ஊக்கமாகவும் அமையும், இணைய தளம் மூலம் ஏதோ ஒரு நிறுவனம் மட்டும் லாபம் சம்பாதிப்பது தடைபட்டு, அனைவரும் பலனடைய வாய்ப்பாக இருக்கும்.
கருத்து பகிர்வு : எஸ்.கே.வி ஷேக் டிராவல் ஜோன் கன்ஸல்டண்ட்ஸ் கீழக்கரை
You must be logged in to post a comment.