வேலூரிலும் கிராம நிர்வாக அதிகாரிகள் கைது…

வேலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தமிழக கிராம நிருவாக அலுவலர்கள் 300 பேர் கைது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் சார்பில் 21 அம்ச கோரீக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இன்று வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சுமார் 300 பேர் தலைவர் ஜீவானந்தம் தலைமையில் கைதாகினர்.

கே.எம்.வாரியார், செய்தியாளர், வேலூர்