பிப்ரவரி 21 உலக தாய்மொழி தினம் ..

பிப்ரவரி 21 இன்று உலக தாய்மொழி தினம் உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது.

1999-ல் யுனெஸ்கோ மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி தாய்மொழி தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. பண்பாடு, கலாச்சாரம், வாழ்க்கை முறை, சிந்தனை என அனைத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் சிறப்பு தாய் மொழிக்கு உண்டு.நமது தாய்மொழி தமிழுக்குண்டு.

தாய்மொழியை பிழை இல்லாமல் பேசவும் ,எழுதவும் தெரியாமல் இளைய சமுதாயத்தை வளர்த்து விடுகிறோம் என்பது நிதர்சனமான உண்மை. உலகில் அதிக இலக்கிய நோபல் பரிசுகளைப் பெற்ற பிரான்ஸ் நாட்டு மக்கள் பிரெஞ்சு மொழியில் பேசுவதை பெருமையாக நினைப்பவர்கள்.

அதிகபட்ச நோபல் பரிசை பெற்றவர்கள் அனைவரும் தங்களின் தாய்மொழியில் பயின்றவர்களே. இந்தியாவின் மிகச்சிறந்த அறிவியல் மேதைகளும் தாய்மொழி வழிக்கல்வியே தேவை என்று வலியுறுத்துகிறார்கள் .

நமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் மீதான பற்று நம்மில் ஒவ்வொருவருக்கும் கட்டாயம் தேவை. இதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நம் கடமை.

பிறமொழிகளை நம் குழந்தைகளை கற்க செய்யும் அதே வேளை அனைத்து மொழிகளுக்கும் தலையாய மொழியான செம்மொழியாம் தமிழ் மொழியை பிழையின்றி பேசுவதற்கும், எழுதுவதற்கும் கற்றுக்கொடுப்போம் என இந்நாளில் உறுதியேற்போம்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்