Home செய்திகள் தென்காசியில் மமக பொதுக்குழு கூட்டம்; ஆளுநர் மாளிகை முற்றுகை உள்ளிட்ட முக்கிய தீர்மானம்..

தென்காசியில் மமக பொதுக்குழு கூட்டம்; ஆளுநர் மாளிகை முற்றுகை உள்ளிட்ட முக்கிய தீர்மானம்..

by ஆசிரியர்

தென்காசியில் மமக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மனிதநேய மக்கள் கட்சியின் தென்காசி மாவட்ட பொதுக்குழு கூட்டம் அக்.15 அன்று தென்காசி பாபக்கி தங்கள் மதரசாவில் நடைபெற்றது. மமக மாவட்ட தலைவர் முகம்மது யாக்கூப் தலைமை தாங்கினார். தமுமுக மாநில துணைத் பொதுச் செயலாளர் எஸ்.மைதீன் சேட்கான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி மாநில செயலாளர் நயினார் முகம்மது, தமுமுக மாவட்டசெயலாளர் அப்துர் ரஹ்மான், மமக மாவட்ட செயலாளர் சலீம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இஸ்மத் மீரான், பஷீர் ஒலி, முகம்மது அலி, பீர் மைதீன், செய்யது அலி, தொண்டர் அணி மாநில துணை செயலாளர் கோகோ அலி, விழி அணி மாநில துணை செயலாளர் முகமது ரபீக், தலைமை கழக பேச்சாளர் கொலம்பஸ் மீரான், மாவட்ட துணைச் செயலாளர்கள் மசூது, கோதர் மைதீன், அபுபக்கர் சித்தீக், அப்துல் மஜீத், சமூகநீதி மாவட்ட செயலாளர் மஜீத் ஷா, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் எம்.எஸ்.ஹமீது, விளையாட்டு அணி மாவட்ட செயலாளர் சிக்கந்தர், வணிகர் அணி மாவட்ட செயலாளர் போரீங் பாதுஷா, விழி அணி மாவட்ட செயலாளர் ஷேக் அப்பாஸ், மனிதநேய தொழிற் சங்க அணி மாவட்ட செயலாளர் உமர் கத்தாப், தொண்டர் அணி மாவட்ட செயலாளர் ஜாபர் உசேன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் பீர் முகம்மது, வணிகர் அணி மாவட்ட பொருளாளர் நவாஸ்கான், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் பாதுஷா, மருத்துவ அணி மாவட்ட பொருளாளர் வருங்காலம் கனி, இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் செய்யது அலி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை வலியுறுத்தி வரும் 28ம் தேதி அன்று தமுமுக சார்பில் சென்னையில் நடைபெறும் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் தென்காசி மாவட்டத்திலிருந்து திரளானோரை பங்கேற்கச் செய்வது, அனைத்து ஊர் கிளை கழகங்களிலும் செயற்குழு கூட்டங்கள் நடத்தி மாவட்ட நிர்வாகிகள் அக்கூட்டத்தில் பங்கேற்று கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு திரளாக மக்களை திரட்டுவது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com