Home செய்திகள் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த தின மராத்தான் ஓட்டம்: வென்ற வீரர்களுக்கு பரிசு..

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த தின மராத்தான் ஓட்டம்: வென்ற வீரர்களுக்கு பரிசு..

by ஆசிரியர்

ராமநாதபுரம், அக்.16 – முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் 92வது பிறந்த நாளை முன்னிட்டு ராமேஸ்வரம் பேய்க்கரும்பு பகுதியில் உள்ள அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தில் மினி மாரத்தான் போட்டி நடந்தது. அப்துல் கலாம் நினைவிடத்தில் இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தலைவர் சோமநாத் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ராமநாதபுரம்  கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நவாஸ்கனி எம்பி, முருகேசன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலையில் போட்டியை இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தலைவர் சோமநாத் துவக்கி வைத்தார்.

21 கிமீ தூர ஆடவர் பிரிவில் புதுக்கோட்டை லட்சுமணன்  உதகை வினோத் குமார், ரெங்கராஜ், மகளிர் பிரிவில் பேராவூரணி சுகன்யா, மணப்பாறை விஜயா வைஷ்ணவி, மனோன் மணி ஆகியோர் முதல் மூன்று இடம் பிடித்தனர். இவர்களுக்கு முறையே ரூ.50,000, ரூ.25,000, ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.  5 கிமீ மகளிர் பிரிவில் சிவகங்கை அபிஸ்ரீ, கரூர் அனிதா, லலிதா, ஆடவர் பிரிவில் ராஜபாளையம் மாரி சரத், கன்னியாகுமரி அகில் ராம், ராமநாதபுரம் வசந்த் ஆகியோர் முதல் 3 இடம் பிடித்தனர். இவர்களுக்கு முறையே ரூ.10,000, ரூ.5,000, ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச்சான்று வழங்கப்பட்டது. எஸ்பி தங்கதுரை, மாவட்ட வனக்காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு, உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், கோட்டாட்சியர் கோபு, டிஎஸ்பி உமாதேவி, மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி, மண்டபம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ராமேஸ்வரம் நகர் மன்றத்தலைவர் நாசர்கான், மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா, உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com