Home செய்திகள் மதுரை மாநகரில் ஊரடங்கை மீறியதாக 9391 பேர் கைது

மதுரை மாநகரில் ஊரடங்கை மீறியதாக 9391 பேர் கைது

by mohan

மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ளது. எனவே ஊரடங்குச் சட்டத்தை மீறி மோட்டார் சைக்கிளில் வெளியே செல்பவர்களை கைது செய்து அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை போலீஸார் முடுக்கி விட்டு வருகின்றனர்மதுரை மாநகரில் 25 காவல் நிலையங்கள் உள்ளன. இவை மதுரை டவுண், திருப்பரங்குன்றம், திலகர் திடல், தல்லாகுளம், அண்ணாநகர் ஆகிய 5 உதவி கமிஷனர்கள் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகின்றன.மதுரை டவுண் காவல் உதவி ஆணையர் மண்டலத்தில் விளக்குத்தூண், தெப்பக்குளம், தெற்குவாசல்,ஜெய்ஹிந்த்புரம், ஆகிய 4 காவல் நிலையங்கள் உள்ளன.ஊரடங்கு தடைச் சட்டத்தை மீறியதாக விளக்குத்தூணில் 4 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதே போல தெப்பக்குளத்தில் 5 வழக்கும், தெற்குவாசலில் 4 வழக்குகளும், ஜெய்ஹிந்த்புரத்தில் 4 வழக்குகளும் பதிவாகி உள்ளது.திருப்பரங்குன்றம் மண்டலத்தில் கீரைத்துறை, அவனியாபுரம், திருப்பரங்குன்றம், திருநகர் ஆகிய 4 காவல் நிலையங்கள் உள்ளன.திருப்பரங்குன்றம் போலீஸ் நிலையத்தில் ஊரடங்கு தடை சட்டத்தை மீறியதாக 4 வழக்குகளும், கீரைத்துறையில் 1 வழக்குகளும், அவனியாபுரத்தில் 12 வழக்கும், திருநகரில் 1 வழக்கும் பதிவாகி உள்ளன.திலகர் திடல் மண்டலத்தில் திடீர்நகர், சுப்பிரமணியபுரம், எஸ் எஸ் காலனி, திலகர் திடல், கரிமேடு ஆகிய 5 காவல் நிலையங்கள் உள்ளன.திடீர்நகர் போலீசில் ஊரடங்கு தடை சட்டத்தை மீறியதாக ஒரு வழக்கும், எஸ் எஸ் காலனியில் 7 வழக்குகளும், திலகர் திடலில் 8 வழக்குகளும் பதிவாகி உள்ளன.தல்லாகுளம் மண்டலத்தில் தல்லாகுளம், செல்லூர், கூடல்புதூர் ஆகிய 3 காவல் நிலையங்கள் உள்ளன. இதில் தல்லா குளத்தில் 4 வழக்குகளும், செல்லூரில் 11 வழக்குகளும், கூடல்புதூரில் 11 வழக்குகளும் பதிவாகி உள்ளது.

அண்ணாநகர் மண்டலத்தில் கே புதூர், மதிச்சியம், அண்ணாநகர் ஆகிய 3 காவல் நிலையங்கள் உள்ளன. இதில் கே புதூரில் 6 வழக்குகளும், அண்ணாநகரில் 3 வழக்குகளும் பதிவாகி உள்ளது.மதுரை மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகள் திறக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் போலீசாரின் கெடுபிடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொதுமக்கள் நடமாட்டம் நேற்று பெருமளவு குறைந்து உள்ளது.மதுரை மாநகரில் கடந்த நேற்று (16-ந்தேதி) மட்டும் ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக 86 வழக்குகள் பதிவாகியுள்ளன.இது தொடர்பாக 95 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 86 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.மதுரை மாநகரை பொறுத்தவரை மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் நேற்று (16-ந்தேதி) வரை ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக 8635 வழக்குகள் பதிவாகியுள்ளன.இது தொடர்பாக 9391 பேர் கைது செய்யப் பட்டு, அவர்களிடமிருந்து 4269 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!