Home செய்திகள் நிலக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்..சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு…

நிலக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்..சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு…

by ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் (6.6.2019) நேற்று  தமிழக அரசு சார்பிலும், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏ.எல்.ஐ .எம்.சி.ஓ. திட்டத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்கள்  வழங்குவதற்காக பயனாளிகளை தேர்வு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சரவண பாண்டியன் வரவேற்று பேசினார்.

இந்த சிறப்பு முகாமில் கலந்துகொண்ட மாற்றுத் திறனாளிகளின் குறைபாட்டினை அளவீடு செய்து  குறைபாடு உள்ள நபர்களுக்கு சரியான சரி செய்ய தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டது.. இந்த இந்த முகாமில் நிலக்கோட்டை, அணைப்பட்டி, கொடைரோடு, வத்தலகுண்டு, விளாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இந்த முகாமினை நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் தேன்மொழி சேகர் திடீரென வந்து ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த மாற்றுத் திறனாளிகளும் முதியோர்களும் மாதாந்திர ஓய்வூதியம் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், மேலும்  அதிகாரிகளிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான நிதி உதவி தேவைப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவியுங்கள் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வழிவகை செய்து தருகிறேன் என வாக்குறுதி அளித்தார்.

அப்போது முன்னாள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் யாகப்பன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சேகர், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு குழு டாக்டர்கள், மண்டலத் துணை தாசில்தார்கள் ருக்மணி மணிமேகலை டேனியல் உட்பட பலர் உடனிருந்தனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!