Home செய்திகள் பொது முடக்கம் தளர்வுக்கு பிறகு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தனி அலுவலர் நியமனம். எம்எல்ஏ தகவல்

பொது முடக்கம் தளர்வுக்கு பிறகு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தனி அலுவலர் நியமனம். எம்எல்ஏ தகவல்

by mohan

கொரோனா பொது முடக்க உத்தரவு தளர்த்தப்பட்டவுடன் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தனி அலுவலரை தமிழக அரசு நியமிக்கும் என்று எம்எல்ஏ வீ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையிலும், மயிலாடுதுறை மக்கள் 30 ஆண்டுகால கனவை நனவாக்கும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மார்ச் 24-ஆம் தேதி மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவித்தார் கொரோனா நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெறும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் தமிழக அரசு மயிலாடுதுறை மாவட்டத்துக்கு தனி அலுவலர் நியமிக்காமல் புறக்கணிக்கப்படுவதாக மயிலாடுதுறை திமுக எம்.பி. செ.இராமலிங்கம் கூறியுள்ளார்.கொரோனா தொற்று பிரச்சனை தீர்வுடன், எல்லை வரையறை செய்யப்படும் என்று ஏற்கனவே அரசாணை வெளியிட்டுள்ளது. எனவே கொரோனா பொது முடக்கம் தளர்த்தப்பட்டவுடன் மயிலாடுதுறைக்கு தனி அலுவலரை தமிழக முதல்வர் நியமனம் செய்வார்.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு ஏற்கனவே இடம் தேர்வு செய்யப்பட்டிருப்பதால் தமிழக முதல்வர் பழனிச்சாமி மயிலாடுதுறைக்கு நேரில் வந்து புதிய மாவட்டத்தை தொடங்கி வைப்பதோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி பணிகளை விரைவில் துவங்கி வைப்பார் என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!