Home செய்திகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறை சார்பில் பாரதியாரின் முழுத் திருவுருவச் சிலை திறப்பு.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறை சார்பில் பாரதியாரின் முழுத் திருவுருவச் சிலை திறப்பு.

by mohan

மகாகவி பாரதியாரின் 141 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறை சார்பாக மகாகவி பாரதியாரின் 141 பிறந்தநாள் விழா, மகாகவி பாரதியாரின் முழுத் திருவுருவச் சிலை திறப்பு விழா, மகாகவி பாரதியாரின் படைப்புகள் பன்முகப் பார்வை என்னும் பொருளில் பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் ஆய்வுக்கோவை வெளியீட்டு விழா, மகாகவி பாரதியாரின் கவிதைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா ஆகிய நிகழ்வு மதுரை காமராசர் பல்கலைக்கழத் தமியற்புலத்தில் நடைபெற்றது.விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறைத் தலைவரும் மகாகவி பாரதியாரின் திருவுருவச் சிலை ஏற்பாட்டளரும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமாகிய முனைவர் போ.சத்தியமூர்த்தி வரவேற்புரையாற்றினார்.விழாவிற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழக மாண்பாமை துணைவேந்தர் பேராசிரியர் ஜா. குமார்  தலைமைேயேற்று பாரதியார் கவிதைத் தொகுப்பினை வெளிட்டார்.மகாகவி பாரதியாரின் 141 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறை சார்பாகத் தமிழியற்புலக் கட்டிடத்தின் முன்பாக பாரதியாரின் 61/2 அடி திருவுருவச் சிலை யை மத்திய அரசின் மே னாள் செயலரும், இந்திய விமான நிலையங்களின் மேலாண்மை இயக்குநருமான  சு. மச்சேந்திரநாதன் ஐ.ஏ.எஸ். திறந்து வைத்து, கவிதைத் தொகுதி மற்றும் ஆய்வுக் கோவையைப் பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் மேனாள் மேற்கு வங்க அரசின் கூடுதல் தலைமைச்செயலாளரும் மகாவி பாரதியாரின் திருவுருவச் சிலை நன்கொடையாளருமான .கோ.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்  பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வுக்ஆய்வுக் கோவையை வெளியிட்டு விழாப் பேருரையாற்றினார். மேலும் அவர்செய்தியாளர்களைச் சந்தித்து கூறும்போது,உலகில் தமிழ், சமஸ்கிருதம் உள்ளிட்ட ஆறு மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.இந்த ஆறு மொழிகளில் தமிழ், சமஸ்கிருதம் இந்தியாவில் இருந்து வந்தவை.இதில் சமஸ்கிருதத்திற்குப் பல பல்கலைக்கழகங்களில் இருக்கைகள் உள்ளன.ஆனால் இம்மொழி வாழும் மொழி அல்ல.செம்மொழிக்கான ஏழு தகுதிகளையும் கொண்ட ஒரே மொழியானதமிழுக்குப் பல்கலைக் கழகங்களில் இருக்கை இல்லை.தமிழ் மொழி குறித்தும் தமிழின் சிறப்புகள் குறித்தும் திருக்குறள் பெருமை குறித்தும் போகும் இடமெல்லாம் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பேசி வருகின்றனர். மாநிலப் பல்கலைக்கழகங்களிலும் தமிழுக்கு இருக்கை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பு பேராசிரியர் ம.இராமகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.நிகழ்வில் இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகி டி.கிருஷ்ணாபுரம் திரு. அழகம்பெருமாள் கோனார் அவர்கள் பாராட்டப் பெற்றார். விழாவில் மாமல்லபுரம் படைப்புச் சிற்பிகள் கலைக் கூடத்தின் தலைவர், சிற்பி. டி.பாஸ்கரன் அவர்களுக்கு சர்வதேச அமைப்புகள் இணைந்து பண்பாட்டுக் கலைச்செம்மல் என்ற விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. நிகழ்வில்பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ஆய்வு மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!