இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை இயக்கம் சார்பாக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 118 வது பிறந்த நாள் விழா

மக்கள் பாதையின் வழிகாட்டி வழிகாட்டுதலில் இயங்கும் மக்கள் பாதை இயக்கம் சார்பாக  கல்வித் தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான ஐயா காமராஜர்  118வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.மக்கள் பாதையின் திண்ணை திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ மாணவிகளுக்கான இணைய வழி ஒவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு காமராஜர் அவர்களின் திருவுருவப்படத்தை ஓவியமாக வரைந்து புகைப்படம் எடுத்து மக்கள் பாதை நிர்வாகிகளுக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் காமராஜர் ஐயா போல் வேடமணிந்து பள்ளி மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.நிகழ்வில் கலையனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் தீன தயாளன், நிவாஷ், ஹரிஷ், சந்துரு, ஜவகர் பாபு, ஜெகன், கண்மணி, ஜெயஸ்ரீ, அபிதா, சுபஸ்ரீ, அனுஸ்ரீ ஆகியோரை மக்கள் பாதை மாவட்ட பொறுப்பாளர்கள் வாழ்த்தினார்கள்.இராமநாதபுரம் மாவட்ட மகளிரணி துணை ஒருங்கிணைப்பாளர் பார்கவி, திண்ணை பள்ளி ஆசிரியைகள் பிரீத்தி, தென்மொழி மற்றும் பாலமுத்து ,சிவராஜ், முகேஷ் குமார் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..