அமைச்சர் மணிகண்டன் அமெரிக்கா சுற்றுப்பயணம்…

தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அரசு பயணமாக செப்., 15ல் அமெரிக்கா சென்றார். அங்கு பல்வேறு துறை அமைச்சர்கள், அதிகாரிகளை ஆலோனை பெற்று வருகிறார்.

சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக , வரும் 2019 ஜனவரியில் தமிழகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்ப மேலாண் மாநாட்டில் பங்கேற்க வருமாறு அமெரிக்காவைச் சேர்ந்த உதவி மேலாண் இயக்குநர் அகஸ்டினை சந்தித்து அமைச்சர் மணிகண்டன், தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுத்தார்.

இச்சந்திப்பின் போது தகவல் தொழில் நுட்பத் துறை செயலர் சந்தோஷ் பாபு, எல்காட் நிர்வாக இயக்குநர் விஜயகுமார் உடன் உள்ளனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.