கூட்டணிக்காக கவலைப்படும் திமுக – கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு…

கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் தீபா வரவேற்றார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் வாழ்த்தி பேசினார். அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

இதில், 2014-17, 2015-18 படித்த மாணவ, மாணவியர்கள் 296 பட்டங்கள் பெற்றனர். பேராசிரியர் சண்முக சுந்தரம் நன்றி கூறினார். விழாவில், மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இதன் பின்பு அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது,பல நேரங்களில் தம்பிதுரை தெரிவிக்கும் கருத்துக்கள் அவரது சொந்த கருத்து தெரிவித்துள்ளார். அதிமுக ஜனநாயகத்தை மதிக்கின்ற கட்சி. கட்சியில் உள்ளவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவிக்கலாம் அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், செயற்குழு, பொதுக்குழு முடிவெடுப்பார்கள். தேர்தலுக்கு கால அவகாசம் இருக்கிறது எனவே இதில் அவசரப்பட்டு எந்த கருத்து தெரிவித்தாலும் சரியாக இருக்காது.

கூட்டணி பற்றி சிந்திக்காமல், தேர்தல் பணிகளை அதிமுக தொடங்கி பணிகளை செய்து வருகிறது. தேர்தல் அறிவிப்பு முன்னரே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. எங்களுக்கு கூட்டணி பற்றி கவலை இல்லை,திமுக போன்ற கட்சிகள் கூட்டணி பற்றி கவலை பட்டுக் கொண்டிருக்கிறது.

கூட்டணி, வேட்பாளர்கள் தேர்வு ஆகியவற்றுக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு எடுக்கின்ற முடிவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சேர்ந்து எடுக்கும் முடிவே இறுதியாகும். நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் அறிவித்தாலும், தனியாக அறிவித்தாலும் ,எப்படி அறிவித்தாலும் அதை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம்

அதிமுக தலைமை யாரை முடிவு செய்து வேட்பாளராக அறிவித்தாலும் அவர் தான் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெறுவார். கனிமொழி இல்லை, யார் நின்றாலும் நாங்கள் கவலைப்படவில்லை. கடந்த தேர்தலின் போது திமுக பல்வேறு கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தது,இன்றைக்கு அந்தக் கூட்டணி கூட மாறுகின்ற சூழ்நிலை உள்ளது, நாங்கள் தனியாய் இருக்கும் போதே வெற்றிபெற்ற நிலையில் கூட்டணி சேர்ந்தால் உறுதியாக நாங்கள் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெறுவோம் என்றார்