Home செய்திகள்கீழக்கரை செய்திகள் நல்ல கருத்துக்களை சிறு குழந்தைகள் கூறினால் கூட முதல்வர் ஏற்றுக்கொள்வார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி…

நல்ல கருத்துக்களை சிறு குழந்தைகள் கூறினால் கூட முதல்வர் ஏற்றுக்கொள்வார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி…

by ஆசிரியர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியம் விஸ்வநத்தம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்ய ஏதுவாக 20 லட்சம் மதிப்பில் புதியதாக உந்து நிலையம் கட்டுவதற்கு உயர்திரு.மாவட்ட ஆட்சித்தலைவர், பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்.

சிவகாசி திருத்தங்கல் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே மேம்பாலங்கள் அமைப்பதற்கு தொகுதி அமைச்சர் எதிர்ப்பு தெரிவிப்பதாக எம்பி மாணிக்க தாகூர் குற்றச்சாட்டிற்கு தவறான கருத்து எனவும் மேம்பால பணிகளுக்காக பல்வேறு கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இரண்டு மாதங்களில் மேம்பால பணிகளுக்காக பூமி பூஜை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்காக பேசுபவர்களுக்கு இந்திய அரசும் தமிழக அரசும் துணை நிற்கும். 1947 இருந்த ராணுவம் கிடையாது இந்தியா மோடி தலைமையில் இந்திய ராணுவம் வலுவாக உள்ளது.

CORONA விவகாரத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைத்துக் காட்ட படுவதாகவும், பாதிப்பு குறித்து இறைவன் மீது பழிபோடுவது கண்டனத்துக்கு உரியது என ஸ்டாலின் கூறியுள்ளதற்கு.. எடப்பாடி ஆட்சி நடக்கப் போய் தான் நாம் இங்கு நிற்கிறோம். திமுக ஆட்சி நடந்து இருந்தால் ஒருவர் கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். இறப்பவர்களை மறைக்க முடியாது. தினமும் வெற்று அறிக்கை விடுகிறார். வழியில்லாமல் முழிக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் வார்த்தைப் போர் நடைபெறுவதாக தெரிகிறது என்ற கருத்திற்கு. நகைச்சுவை அரசியல் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். எடப்பாடி பாலாக கொடுக்கிறார்  ஸ்டாலின் விஷமாகக் கக்குகிறார். எதிர்க்கட்சிகள் கூறும் அறிவுரைகளை முதல்வர் கேட்கவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு.

நல்லவைகளை சிறு குழந்தைகள் சொன்னாள் கூட முதல்வர் ஏற்றுக்கொள்வார். ஸ்டாலின் வார்த்தைகளை அரசியல் அரங்கிற்குள் இருப்பவர்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!