Home செய்திகள் திருப்புல்லாணி ஒன்றியம் அ.இ.அ.தி.மு.க கட்சி சார்பில் காவிரி நதி நீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம் ..

திருப்புல்லாணி ஒன்றியம் அ.இ.அ.தி.மு.க கட்சி சார்பில் காவிரி நதி நீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம் ..

by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் அ.இ.அ.தி.மு.க கட்சி சார்பில்  ரெகுநாதபுரத்தில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட மாபெரும் வெற்றி விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கழக மருத்துவ அணி துணை செயலாளரும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சருமான டாக்டர் மணிகண்டன் சிறப்புரையாற்றினார்.
அக்கூட்டத்தில் அவர் பேசுகையில்,”   கர்நாடக கேரளா தமிழ்நாடு பாண்டிச்சேரி மாநிலங்களுக்கு ஒரு சில மாதங்களில் காவிரி நீரை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று ஒரு ஒப்பந்தம் உள்ளது.  இந்த ஒப்பந்தம் ஐம்பது ஆண்டு களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். 1974 ம் ஆண்டு மத்தியில் இந்திரகாந்தி ஆட்சி நடைபெற்று கொண்டிருந்த போது, தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியில் மத்திய அரசு கொடுத்த நெருக்கடியால் இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை. இதனால் கர்நாடக அரசு தமிழ் நாட்டிற்க்கு தண்ணீர் தர மறுக்க ஆரம்பித்தது. இதனால் விவசாயிகள் கடுமையாக போராட்டம் நடத்தினர். 1986ம் ஆண்டு விவசாயிகள் காவிரி நதி நீர் பாதுகாப்பு கூட்டம் சார்பில் வழக்கு தொடர்ந்தனர்  அதன் அடிப்படையில் மாண்புமிகு மறைந்த முதலமைச்சர் அம்மா உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என மம்தா பானார்ஜி பல முக்கிய தலைவர்கள் கேட்டதின் பேரில் அம்மா கை விட்டனர் 5/2/2007 ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் 205 டிஎம்சி தண்ணீர் தர நடுவர் மன்ற தீர்ப்பு வந்தது. அந்த நேரத்தில் காங்கிரஸ் தி.மு.க மத்தியிலும் மாநிலத்திலும் முழு அதிகாரம் பெற்று இருந்தும் மத்திய காங்கிரஸ்சுக்கு பயந்து தி.மு.க கர்நாடகத்திடம் தண்ணீர் கேட்கவில்லை.
2018ல் அனைத்து மாவட்டங்களிலும் அ.இ.அ.தி.முக சார்பில் உண்ணாவிரத போராட்டம்  மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் போராட்டம் காரணமாக 177  டி.எம்.சி தண்ணீரை பெற்றுள்ளோம்.  தற்போது நடந்து கொண்டிருக்கும் நல் ஆட்சிக்கு கலங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று தி.மு.க சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஸ்டெர்லைட், சேலம் சென்னை ஆறு வழிச்சாலை ஆகியவற்றை  கையில் எடுத்துள்ளனர் என்றார்.
இப்பொதுக்கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் முருகேசன், திருப்புல்லாணி ஒன்றிய கழக செயலாளர் முனியாண்டி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் ஜெயஜோதி, கிளை கழக செயலாளர்கள் நாகநாதன், செளந்தரராஜன், சின்னராஜ், சரவணன், கோபாலகிருஷ்ணன், முனியசாமி, சிவக்குமார், கண்ணன், பெரியசாமி, செல்வரத்தினம், கார்த்தி, சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!