Home செய்திகள் தொழில் துவங்க முன் வருவோருக்கு வரி விலக்கு அமைச்சர் மணிகண்டன் பேச்சு..

தொழில் துவங்க முன் வருவோருக்கு வரி விலக்கு அமைச்சர் மணிகண்டன் பேச்சு..

by ஆசிரியர்

சர்வதேச தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு 2019 சென்னையில் ஜன.23, 24 ல் நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆயத்த கூட்டம் ராமநாதபுரம் கோல்டன் ரெசிடென்சியில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்தார். இதில் 11 பேருக்கு நீட்ஸ் மற்றும் டிஒய்இபி., திட்டத்தின் கீழ் ரூ.266.10 லட்சம் திட்ட மதிப்பில் புதிய தொழில்கள் துவங்க தமிழக அரசின் மானிய உதவி ரூ.46.60 லட்சம் அளவிலான பயன்களை தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்.

அவர் பேசியதாவது, தமிழக முதல்வரின் தொலைநோக்கு பார்வை 2023 ஆவணத்தின் படி தமிழகத்தை தொழில் வளர்ச்சியில் முதன்மைமாநிலமாக மாற்ற தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், அதன் அடிப்படையில் தொழில் வளர்ச்சியை வேகப்படுத்தவும் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது . முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2015 செப்டம்பரில் சென்னையில் நடைபெற்றது .இதில் தமிழகத்தில் 98 பெருந்தொழில் நிறுவனங்கள் ரூ.2.25 லட்சம் கோடி முதலீட்டில் தொழில் துவங்க புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு , அதில் 61 நிறுவனங்கள் 62, 738 கோடியில் தொடங்கப்பட்டு 76,271 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் 10, 073 நிறுவனங்கள் மூலம் ரூ.16,553 கோடிக்கு தொழில்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களில் 20 நிறுவனங்கள் மூலம் ரூ.7.13 கோடி முதலீட்டில் தொழில் துவங்கப்பட்டு 253 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வரும் ஜன., 23 24 தேதிகளில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு 2019 சென்னையில் முதல்வர் தலைமையில் நடைபெற உள்ளது. மாநாட்டின் போது 2 லட்சம் கோடிக்கு மேற்பட்ட தொழில் சார்ந்த முதலீடுகள் தமிழகத்தில் ஏற்படுத்த தேவையான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன . குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் ரூ. 25 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட தொழில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்ற சீரிய நோக்கில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தொழில் முதலீடுகள் வரவேற்கும் பணி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரூ.200 கோடி அளவில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது 145 பேருக்கு ரூ.150 கோடிக்கு தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அனைத்து தொழிலாளர்களுக்கும் தமிழ் நாடு வணிக வரிச் சட்டம் 2017 படி அனைத்து உரிமங்கள் மற்றும் வரைபட ஒப்புதல் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உற்பத்தி நிறுவனங்களுக்கு சிறு குறு நடுத்தர கொள்கை 2008 ன் படி தகுதி உள்ள மானியங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது .இவ்வாறு பேசினார்.

மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள், ராமநாதபுரம் குறு, சிறு தொழில்கள் சங்கத் தலைவர் பாண்டியன், வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக கிளை மேலாளர் ஆனந்தன், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் கிளை மேலாளர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சங்கரன், மாவட்ட தொழில் மைய மேலாளர் வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

செய்தி :- முருகன், இராமநாதபுரம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!