Home செய்திகள் மக்களின் தேவைகளை நிறைவேற்ற அமைச்சர் மணிகண்டன் நேரில் ஆய்வு..

மக்களின் தேவைகளை நிறைவேற்ற அமைச்சர் மணிகண்டன் நேரில் ஆய்வு..

by ஆசிரியர்

இராமநாதபுரம் சட்டசபை தொகுதியை தமிழகத்தில் முன் மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் எம். மணிகண்டன் நேற்று (28.7.18) நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசினார்.  இதை நிறைவேற்றும் விதமாக கிராமம் கிராமமாக மக்களை சந்தித்து தேவைகளை பூர்த்தி செய்து தருவேன் எனவும் உறுதியுடன் கூறினார்.

அதன் முதற்கட்டமாக ராமநாதபுரம் ஒன்றியம் ராஜசூரியமடை கிராமத்தில் மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட கண்மாயை இன்று ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள கருவேல மரங்களை அகற்றவும், கண்மாயில் மணல் மேட்டை சமன் செய்து மக்கள் சிரமமின்றி பயன்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.  குடிநீர் தேவைக்காக குழாய் இணைப்பு கேட்ட கிராம மக்களுக்கு உடனடியாக 5 குடிநீர் குழாய்கள் இணைப்பு வழங்க உத்தரவிட்டார்.

இந்த நிகழ்வின் போது இராமநாதபுரம் முன்னாள் ஒன்றிய செயலாளர் எஸ். ராஜேந்திரன் முன்னிலையில் பொதுமக்களை சந்தித்த அமைச்சர் மணிகண்டன் கிராம வளர்ச்சிக்காகவும், தனிப்பட்ட உதவிக்காகவும் ஏழை மக்கள் எந்த நேரத்திலும் என்னை நீங்கள் சந்திக்கலாம் மக்களுக்கு சேவை ஆற்ற காத்திருக்கிறேன் என்று மக்களுக்களிடம் கூறினார்.

மேலும் அமைச்சருடன் அரசு அதிகாரிகள்  உதவி செயற்பொறியாளர் ராமர் மற்றும்  கழக நிர்வாகிகளான இராமநாதபுரம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் இராமமூர்த்தி, முன்னாள் தொகுதி கழகச் செயலாளர் தஞ்சி சுரேஷ் குமார், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் மருது பாண்டியன், கடலாடி ஒன்றிய கழக துணைச் செயலாளர் சண்முக பாண்டியன், கேஎஸ். மணிகண்டன் மற்றும் பெருங்குளம் ஜானகிராமன், வழக்கறிஞர் கருணாகரன், ஆதில் அமின், குமார், துரைராஜ், முனியாண்டி, நாட்டுக்கோட்டை ஜெயகார்த்திகேயன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!