மின்ஹாஜ் பள்ளி ஐமாத் மதரஸா வளாகத்தில் நடைபெற்ற சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் நிகழ்ச்சி

மின்ஹாஜ் பள்ளி ஐமாத் மதரஸா வளாகத்தில் நடைபெற்ற சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் நிகழ்ச்சி

கீழக்கரையில் இன்று (01-02-2017) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்ஹாஜ் பள்ளி ஐமாத்திற்கு உட்பட்ட மத்ரசதுஸ் சல்மா அரபி மதரஸா (முகம்மது அப்பா தர்ஹா) வளாகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் 200க்கும் மேற்ப்பட்ட சிறார்களுக்கு ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமுக்கு வருகை தந்த பெற்றோர்களும், பொதுமக்களும் எவ்வித சிரமமுமின்றி தங்கள் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுப்பதற்காக சாமியானா பந்தல் அமைத்து முறைப்படி அவர்களை வரவேற்று அமர வைத்து வரிசைக்கிரமக்காக அனுப்பி முறைப்படுத்திய நண்பர்களை வாழ்த்தியே ஆக வேண்டும். அது மட்டுமல்லாது கீழக்கரை நகராட்சி சார்பாக நில வேம்பு கசாயமும் இதே முகாமில் வழங்கப்பட்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிகழ்ச்சியினை சட்டப் போராளிகள் நூருல் ஜமான், ஜெமீல், கீழக்கரை நகர் SDPI கட்சி நிர்வாகிகள் குதுபு ஜமான், ராசித் மற்றும் மின் ஹாஜ் பள்ளி ஜமாஅத் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.