கீழக்கரையில் நாளை (18/01/2019) அனைத்து ஜமாத்தினர் மற்றும் சங்கங்கள் இணைந்து நடத்தும் மீலாது நபி விழா..

கீழக்கரை அனைத்து ஜமாஅத் ஒருங்கிணைந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொறுப்பேற்று நடத்தும் மாபெரும் மீலாது விழா 18-01-2019 வெள்ளிக்கிழமை மாலை  4.30 மணிக்கு  ஹைராத்துல் ஜலாலிய்யா பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இவ்விழாவிற்கு தலைமை மவ்லவி ஃபாஜில் காஜி A.M.M. காதர் பக்ஸ் ஹுசைன் ஸித்தீக்கி M.A.(டவுன் காஜி, கீழக்கரை. தலைவர், அனைத்து ஜமாஅத் ஷரீஅத் வழிகாட்டு குழு, கீழக்கரை.),  முன்னிலை கீழக்கரை அனைத்து ஜமாஅத்களின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும  இவ்விழாவிற்கு சிறப்புரை A.அன்வர் ராஜா M.P. (தலைவர், தமிழ்நாடு அரசு வக்ஃபு வாரியம். இராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்),  K.A.M. முஹம்மது அபூபக்கர் M.L.A.(சட்டமன்ற கட்சித் தலைவர், இ.யூ.முஸ்லிம் லீக். மாநில பொதுச்செயலாளர், இ.யூ.முஸ்லிம் லீக். உறுப்பினர், தமிழ்நாடு அரசு வக்ஃபு வாரியம்.),  மவ்லவி காரி அஷ்ரஃபுல் பயான் A.S.M. முஹம்மது ஹாரூன் தாவூதி, (முதல்வர், அல் ஃபய்யாஜுல் உலூம் பெண்கள் அரபு கல்லூரி, திண்டுக்கல்) ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.

மேலும் பல்வேறு  போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படயிருக்கிறது. இவ்விழாவிற்கு அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு  கீழக்கரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும்  அனைத்து ஜமாஅத்கள் மற்றும் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.