காட்பாடி பகுதியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது…

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் அதிமுக நிறுவனர் மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் பிறந்த நாள் முன்னிட்டு வேலூர் மாநகர அதிமுக 6 – வட்டம் சார்பில் லட்சுமி பவனில் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் செயலாளர் கே.ஆர்.ரவி தலைமையில் எம்.ஜி, ஆர்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்பு எழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் நகர செயலாளர் கே.ஆர்.பாபு மாநகர மகளிர் அணி இ ணை செயலாளர் தனலட்சுமி அவைத் தலைவர் மனோகர் முன்னாள் கவுன்சிலர் சோமசுந்தரம் மாணவரணி அண்ணாதுரை, கோவிந்தசாமி, சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்