காட்பாடியில் எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு மௌன ஊர்வலம்..வீடியோ..

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் 31ம் ஆண்டு நினைவு நாள் காட்பாடியில் மவுன ஊர்வலம் அதிமுக சார்பில் நடைபெற்றது.

காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்ட மவுன ஊர்வலத்தில் வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சு. ரவி MLA,  மாவட்ட துணை செயலாளர் SRK அப்பு,  மாநில மாணவரணி துணை செயலாளர் MD.பாபு, வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் எம்.ஆனந்தன், காட்பாடி ஒன்றிய செயலாளர் KSசுபாஷ், சோளிங்கர் மேற்கு ஒன்றிய செயலாளர் சின்னதுரை, காட்பாடி பகுதி செயலாளர் ஜெனார்தனன், கிழக்கு மாவட்ட தொழிற்நுட்ப பிரிவு செயலாளர் ராகேஷ், திருவலம் கூட்டுறவு கடன் சங்க தலைவர் சுலக்க்ஷனா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இம்மவுன ஊர்வலம் ஓடைபிள்ளையார் கோவில் அருகில் உள்ள எம் ஜி, ஆர் சிலை அருகே முடிந்தது. பின்பு MGR சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

செய்தி:- கே.எம்வாரியார், வேலூர்