கொரோனாவால் உயிரிழ்ந்த ராஜ் டிவின் ஒளிப்பதிவாளர் வேல்முருகன் நினைவஞ்சலி மற்றும் நிதியுதவி வழங்கும் நிகழ்வு..

கொரோனாவால் உயிரிழ்ந்த ராஜ் டிவின் ஒளிப்பதிவாளர் வேல்முருகன் நினைவஞ்சலி மற்றும் நிதியுதவி வழங்கும் நிகழ்வு 16/7/2020 அன்று தேனாம்பேட்டையில் உள்ள ராஜ் தொலைக்காட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

வேல்முருகன் குடும்பத்தினர் சார்பாக அவரது மனைவி சண்முகசுந்தரி, மகன் ஜீவா, மாமனார் சிவா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சி தொடக்கத்தில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மறைந்த வேல்முருகன் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

ராஜ் குழுமத்தின் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் சார்பாக நிதி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழநாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பிலும் நிதி வழங்கப்பட்டது.

உணர்வுபுர்வமான இந்நிகழ்வில் ராஜ் செய்தியின் முதன்மை செய்தி ஆசிரியர் திரு.மகேந்திரன், ராஜ் குழுமத்தின் துணைத் தலைவர் திரு.மோகன், தொழிநுட்ப தலைமை திரு.போஸ்கோ, ராஜ் குழுமத்தின் நிதி ஆலோசகர் திரு.செரியன், ராஜ் குழுமத்தின் தலைமை கணக்காளர் ஜெயசீலன், ராஜ் டிவி செய்தி வாசிப்பாளர் அருள் கேப்ரியல், தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் முதன்மை செயலாளர் ராஜ் டிவி வஜ்ஜிரவேல் உள்ளிட்ட ராஜ் தொலைக்காட்சி குழுமத்தின் ஊழியர்கள் அனைவரும் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் மறைந்த வேல்முருகன் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது. தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் நமது நகரம் ஆசிரியர் சரவணன், பிப்பிள் டுடே ஆசிரியர் சத்யநாராயணன், பேனா முள் ஆசிரியர் பாடி கார்த்திக், சட்ட கேடயம் ஆசிரியர் ராஜன், மக்கள் விருப்பம் ஆசிரியர் தருமராஜா, திங்கள் மலர் ஆசிரியர் சசிகுமார், நீதியின் தீர்ப்பு ஆசிரியர் கிருஷ்ணவேணி, வாசன் பார்வை பொறுப்பாசிரியர் வினோத், வெற்றி யுகம் பொறுப்பாசிரியர் தேனை சரண், வெற்றி யுகம் நிருபர்கள் ஸ்ரீராம், ஹரி கிருஷ்ணன், அசோக் உள்ளிட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..