Home செய்திகள் இராமநாதபுரம் வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு பணிகள் ஆய்வு கூட்டம்..

இராமநாதபுரம் வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு பணிகள் ஆய்வு கூட்டம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம், ஆக.8 -இராமநாதபுரம்  வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். ஆட்சியர் தெரிவிக்கையில், பொதுமக்களுக்கும், வாகன ஒட்டிகளுக்கும் தகுந்த பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நெடுஞ்சாலைத்துறை மூலம் முக்கிய சந்திப்பு சாலைகளில் உரிய பாதுகாப்பு எச்சரிக்கை விளம்பரங்களை வைத்து கண்காணிக்க வேண்டும். தேசிய சாலைகளில் அதிக விபத்து ஏற்படும் இடங்களை  காவல், வட்டார போக்குவரத்து, நெடுஞ்சாலை ஆகிய துறைகள் இணைந்து கண்டறிந்து விபத்துகளை தடுக்கும் வகையில் சாலைகளை சீரமைப்பதுடன் உரிய எச்சரிக்கை விளம்பர பலகை வைக்க வேண்டும். அதிக மக்கள் பயன்படுத்தும் நகர் பகுதியில் உள்ள சாலைகளில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டி மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கிராம சாலைகள், தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் உரிய எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். மாலை நேரங்களில் வட்டார போக்குவரத்து, காவல் துறை இணைந்து ஆய்வு செய்து அதிக வேகத்தில் வரும் வாகன ஓட்டிகளை எச்சரித்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள போதிய விழிப்புணர்வ ஏற்படுத்த வேண்டும் என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் இரா கோவிந்தராஜூலு, வட்டார போக்குவரத்து அலுவலர் ஷேக் முஹமது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) மாரிச்செல்வி, வருவாய் கோட்டாட்சியர் கோபு, காவல் கூடுதல் கண்காணிப்பாளர் அருண், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் பிரேம் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com