Home செய்திகள் உசிலம்பட்டியில் இரண்டு மாவட்ட விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது…

உசிலம்பட்டியில் இரண்டு மாவட்ட விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது…

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உ.வாடிப்பட்டி அருகே அமைந்துள்ள 58 கிராம கால்வாய் தொட்டிப் பாலம் அருகே கல்குவாரி செயல்பட்டு வருகின்றது.இந்தக் கல்குவாரியினால் தொட்டிப்பாலத்தில் விரிசல் ஏற்ப்பட்டு உடையும் அபாயம் உள்ளதாக விவசயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழக அரசு சாhர்பி;ல் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் தொட்டி பாலத்தை பாதுகாக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா விருவீடு மற்றும் சுற்றியுள்ள கிராம விவசாய பொதுமக்கள் மற்றும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் தொட்டி பாலம் மூலம் பயன்பெறும் கிராமப்பகுதி விவசாயிகள் இணைந்து உசிலம்பட்டி வண்டிபேட்டையில் அமைந்துள்ள 58 கிராம பாசனக்கால்வாய் சங்க அலுவலகத்தில் இரு மாவட்ட விவசாயிகளும் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் போராட்டம்;;; மூலம் 58 கிராமம் தொட்டி பாலத்தை மீட்டெடுக்க முடியாத பட்சத்தில் சட்ட ரீதியாகச்; சென்று கல்குவாரியை தடுத்து நிறுத்த முடிவு. செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com