Home செய்திகள்கீழக்கரை செய்திகள் புளியங்குடியில் அனைத்து கடைகளையும் திறக்க வேண்டும்-அனைத்து வர்த்தகர்கள் சங்கம் வலியுறுத்தல்..

புளியங்குடியில் அனைத்து கடைகளையும் திறக்க வேண்டும்-அனைத்து வர்த்தகர்கள் சங்கம் வலியுறுத்தல்..

by ஆசிரியர்

புளியங்குடி நகரில் உள்ள அனைத்து கடைகளையும் திறக்க வேண்டும் என அனைத்து வர்த்தகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கொரோனா தொற்று குணமாகி இயல்பு நிலை திரும்பும் நிலையில், அனைத்து கடைகளையும் திறக்க வேண்டும் வலியுறுத்தி அனைத்து வர்த்தகர்கள் சங்கம் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்த மனுவில் கடந்த 24 ஆம் தேதி முதல் இன்று வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் வியாபாரிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும்,வாழ்வாதாரம் இழந்து மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே அனைத்து கடைகளையும் திறக்க வேண்டும் என வணிகர்கள் கூறியுள்ளனர்.

அதையும் மீறி இந்த மனு நிராகரிக்கப்பட்டால் வரும் 18 ஆம் தேதி காலை புளியங்குடி நகராட்சி அலுவலகம் முன்பு அனைத்து கட்சி வணிகர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்ற அறிவிப்புடன் புளியங்குடி வர்த்தக சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த அறிவிப்பிற்கு பின்பு 16.05.2020 அன்று புளியங்குடி நகராட்சி அலுவலகத்தில் வைத்து வணிகர் சங்கத்தினருடன் கடையநல்லூர் தாசில்தார் அழகப்பா ராஜா தலைமையில் புளியங்குடி DSP சக்திவேல், புளியங்குடி காவல் ஆய்வாளர் அலெக்ஸ் ராஜ் மற்றும் புளியங்குடி நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் வர்த்தக சங்கத்தின் மாவட்ட செயலாளர் காஜா முகைதீன் மற்றும் புளியங்குடி நகர வர்த்தக சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் ஒரு வாரத்திற்குள் கடைகள் அனைத்தும் திறப்பதற்கும் மற்றும் அரசு அறிவித்துள்ள அனைத்து கட்டுப்பாடுகள் தளர்வுகளை ஏற்படுத்துவதற்கும் முயற்சி செய்வதாக தாசில்தார் மற்றும் DSP உத்திரவாதம் அளித்தனர். ஆனால் வணிகர் சங்க நிர்வாகிகள் இது குறித்து அனைத்து சங்கங்களிடமும் ஆலோசித்து போராட்டத்தை கைவிடுவது சம்பந்தமாக முடிவு செய்வோம் என்று கூறிவிட்டு நகராட்சியிலிருந்து வெளியேறினார்கள்.

இந்த கூட்டத்தில் நகர வர்த்தக சங்க தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நகர செயலாளர் முஹம்மது ஷாஜகான், நகர பொருளாளர் அரிகரசுதன் நகை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைத் தலைவர் அப்துர் ரஹ்மான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!