Home செய்திகள் TARATDAC சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டங்களை கூட்ட வலியுறுத்தல்….

TARATDAC சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டங்களை கூட்ட வலியுறுத்தல்….

by ஆசிரியர்

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் (TARATDAC)சார்பில் நடைபெற்ற தொடர் போராட்டங்களின் விளைவாக கடந்த ஆண்டு தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் குறைகள் அனைத்தையும் தீர்க்கும் வண்ணம் கோட்டாட்சியர் தலைமையில் மாதம் ஒருமுறையும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறையும் மாற்றுத்திறனாளிகள் மட்டும் பங்கேற்கும் சிறப்பு குறைதீர் கூட்டங்களை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்திலும் குறைதீர் கூட்டங்கள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி கடந்த மூன்று மாதங்களாக குறைதீர் கூட்டங்கள் நடைபெறவில்லை.

தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்ப பெறப்பட்டுள்ள சூழ்நிலையில் இம்மாதம் முதல் தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்று TARATDAC-சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த காலங்களில் நடைபெற்ற கூட்டங்கள் அனைத்துமே வெறுமனே மனுக்களை பெரும் கூட்டங்களாக மட்டுமே நடத்தப்பட்டது என்பதும், ஒரு கூட்டத்திற்கும் அடுத்த கூட்டத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் எத்தனை மனுக்கள் தீர்வு காணப்பட்டது என்பது பற்றியோ அல்லது எத்தனை மனுக்கள் நடவடிக்கையில் உள்ளது என்பது பற்றியோ ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டதாக தெரியவில்லை.

இவ்வாறு மனுக்களின் நிலை குறித்து ஆய்வு செய்யாமல் வெறுமனே மனுக்களை மட்டும் பெறுகிறபோது மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும்ர ஏமாற்றமே மிஞ்சுகிறது. மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்மந்தப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்காத காரணத்தால் தாங்கள் அளித்த மனுவின் நிலை என்னவென்று தெரியாமல் திரும்ப திரும்ப மனு அளித்து விரக்தியின் விளிம்பிற்கே மாற்றுத்திறனாளிகள் சென்று விடுகின்றனர்.

இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் மனுக்களை மட்டுமே பெறுகின்ற முகாம்களாக நடத்தாமல் மனுக்களின் மீது தீர்வு காணும் முகாம்களாக நடத்த வேண்டுமாறு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்(TARATDAC) திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் P. செல்வநாயகம் – மாவட்ட தலைவர் S. பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!