Home செய்திகள் திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் சம்பந்தமாக திமுக ஆலோசனை கூட்டம்..

திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் சம்பந்தமாக திமுக ஆலோசனை கூட்டம்..

by ஆசிரியர்

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் தனியார் மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும் தேர்தல் பொறுப்பாளரும் ஆன I.பெரியசாமி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.R.S.பாரதி M.P., மாவட்ட செயலாளர்கள் மணிமாறன். மூர்த்தி . தளபதி. உள்ளிட்ட 300 பேர் பங்கு பெற்றனர்.

தொடர்ந்து வேட்பாளர் டாக்டர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது, “கடந்த 8 வருடங்களாக பொதுமக்கள் சார்பில் இருந்தாலும் திமுக சார்பிலும் கேட்கிறேன் குடிநீர் வசதி சாலைவசதி, பாதாள சாக்கடை வசதிகள், போன்ற அடிப்படை தேவைகள் அனைத்தையும் தற்போதைய அதிமுக அரசு நிறைவேற்றவில்லை.

பணம் கொடுத்து வெற்றி அடைந்த பின்னர் ஆட்சியின் மூலம் சொத்துக்களை சேர்த்து வைப்பதையே குறியாக உள்ளனர். அதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. ராஜன்செல்லப்பா கூறியது மாநாட்டில் கூடியதாக இருக்கும் கடந்த எட்டு வருடங்களாக இதுவரை செய்யாதது மக்கள் மத்தியில் பொய்யான வாக்குறுதிகளையும் பொய்யான நிகழ்வுகளையும் இருப்பதாகவே தெரிகிறது.

எங்களுடைய தலைவர் மு க ஸ்டாலின் கூறியிருப்பதாவது எங்களுடைய தேர்தல் அறிக்கையை முன்னிலைப்படுத்தி அதுவே எங்களது ஹீரோ. அதனை முன்னிலைப்படுத்தியே எங்களுடைய செயல்பாடுகளும் நலத்திட்டங்களும் அமையும், பிரச்சாரமும் அமையும் .

திமுக தேர்தல் அறிக்கையை முன்னிறுத்தி களத்தை காண்போம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு ஓட்டுக்கு காசு கொடுத்து அவர்களை விலைக்கு வாங்குவதைவிட அவர்கள் கூட்டுறவு வங்கியில் உள்ள ஐந்து பவுன் அடகு நகைகளை மீட்டுத்தர தருவது என்று அறிவித்து அறிவித்துள்ளார்கள்.

அது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது தொடர்ந்து. கூட்டணி கட்சியான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கூறியுள்ள அறிக்கையில் 12 ஆயிரத்துக்கும் கீழ் வருமானம் பெறும் குடும்பத்திற்கு வங்கி கணக்கில் மாதம் 6000 ரூபாய் வருடத்திற்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளோம் என்பதை பொருளாதார வல்லுனர்களுடன் ஆலோசித்து முடிவு எடுத்துள்ளார்.

அப்படிப்பட்ட இப்படிப்பட்ட நல்ல திட்டங்களை அறிவித்த மத்திய அரசுக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள். திருப்பரங்குன்றம் தொகுதியில் நகர்புறத்தில் உள்ள மக்களுக்கு சாலை வசதி, பாதாள சாக்கடை என்று தான் மிகப் பெரிய குறைபாடாகக் கூறுகிறார்கள் .

கிராம மற்றும் முதலானவற்றிற்கு தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டும் என்று எங்கள் தலைவர் கூறியுள்ளார் தொடர்ந்து திருப்பரங்குன்றம் தொகுதியை பொறுத்தவரையில் மல்லிகை பூ விளைச்சல் அதிகம் உள்ள பகுதியாக உள்ள நிலையில் குளிரூட்டப்பட்ட அறையில் மற்றும் சென்ட் பேக்டரி உருவாக்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கித் தருவோம்.

கல்விக் கடன் ரத்து பற்றி கூறியுள்ளார் கிராமப்புற மக்கள் அவருடைய வாழ்க்கையில் ஒளி ஏற்றும் வகையில் அமைந்துள்ளது. மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி காங்கிரஸ் மற்றும் திமுக கொண்டு வந்த திட்டங்களை அனைத்தையும் அடுத்து உறுதியாக மத்தியில் ராகுல் காந்தி அரசும் மாநிலத்தில் ஸ்டாலின் அரசும் அமையப் பெற்ற உடன் நிலுவையில் உள்ள திட்டங்கள் அனைத்தையும் விரிவாக்கம் மற்றும் செயல்படுத்துவோம்.

மே 23 க்கு பிறகு மத்திய அரசின் மூலம் மதுரை மக்களுக்கு இரவு நேர விமான சேவைக்கு வழிவகை செய்வோம் திருப்பரங்குன்ற பொருத்தவரையில் கிராமங்கள் சார்ந்த இடமாகவே உள்ளது எனவே தான் பணம் கொடுத்து அதனை வெற்றியடைய வெற்றியடைந்தனர் இம்முறையில் திமுக வெற்றி அடையும் நாம் தமிழர் கட்சி மக்கள் நீதி மையம் நாம் தமிழர் கட்சி முதலானவை சேற்றில் முளைத்த காளான் போன்றவை பழைய காலத்தில் கலைஞர் அவர்கள் மற்றும் எம்ஜிஆர் நடிப்பைத் தாண்டி யிலும் அரசியலில் முழு பங்கு மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து உரையாற்றிய அவர்கள் தற்போது பகல் கனவு கண்டு வருபவர்கள் நிச்சயமாக தன் விரலை சுட்டுக் கொல்வார்கள்.

புதிய வாக்களர் குறித்த கேள்விக்கு ? என்னைப் போன்ற வேட்பாளர்களை அறிமுகப்படுத்தப்பட்டு தேர்தலில் போட்டியிட வைப்பதே இளைஞர்களை கவருவதற்கான முயற்சியாகவே உள்ளது. இளைஞர்களை பொறுத்த வரையில் பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வகையான வகுப்புகளும் ட்ரெய்னிங் சென்டர்களும் அமைக்கப்படும்

என்னுடைய எம்எல்ஏ சம்பளத்தில் இருந்து ஒதுக்கி இலவசமாக வகுப்புகள் வழங்கப்படும் என்னுடைய தேர்தல் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையாக அறிவித்துள்ளேன் என Dr. சரவணன் கூறினார். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!