நிலக்கோட்டை இடைத்தேர்தல் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆலோசனை கூட்டம்..

திண்டுக்கல் மாவட்டம்,நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் இடைத்தேர்தல் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தல்  வருகிற மாதம் 18ஆம் தேதி  நடைபெறுவதை ஒட்டி நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்  ஜீனத் பானு தலைமையில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜீனத் பானு கூறியதாவது நிலக்கோட்டை தொகுதியை பொறுத்தவரை தற்போது இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டும் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பொருத்தவரை நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது தேர்தல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது ஆகவே தொகுதியில் உள்ள அனைத்து கட்சிகளும்  உள்ள பேனர்கள் மற்றும் கட்சிக்கொடி சம்பந்தமாக கட்சி சம்பந்தமான விளம்பரங்கள் ஏதேனும் செய்திருந்தால் தேர்தல் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து உடனடியாக அகற்றிக் கொள்ள கேட்டுக் கொண்டார்.

தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து அதிகாரிகளை அணுகி  உரிய அனுமதியை பெற்று கூட்டமோ, பிரச்சாரம் செய்ய அனைத்து கட்சியினரும் தகுந்த முறையில் நடந்து கொள்ள வேண்டும். இதேபோன்று ஏதேனும் சட்டம் ஒழுங்கு மற்றும் தேர்தல் நடத்த கட்சியினரும் ஈடுபடுவதாக யாருக்கு தெரிந்தாலும் உடனடியாக பகுதியில் உள்ள அணை தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் உடனே தொடர்பு கொள்வதற்கு தகுந்தார் போன்று அனைத்து காவல் ஆய்வாளர்கள், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு கொள்ளும் விதமாக அவரின் அனைவரின் செல் நம்பரை அனைத்து கட்சியினர் குறித்து வைத்துக் கொண்டு உரிய தகவல் தருமாறு கேட்டுக் கொண்டார். இக்கூட்டத்தில் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமாரன், நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணன், அம்மையநாயக்கனூர் நிலக்கோட்டை விளாம்பட்டி பட்டிவீரன்பட்டி வத்தலகுண்டு உள்ளிட்ட அனைத்து போலீஸ் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் பேரூராட்சி செயல் அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய ஆணையாளர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் நிலக்கோட்டை தொகுதியில் உள்ள காங்கிரஸ்காரர்கள் யாரும் வரவில்லை. இதுகுறித்து காங்கிரஸ் கட்சித்  வட்டாரதலைவர் கோகுல்நாத் கூறியதாவது: நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டத்திற்கான தகவல் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை ஆகையால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை தேர்தல் அதிகாரி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளையும் இதுபோன்ற கூட்டங்களுக்கு அழைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார் . தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது உடனடியாக கூட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை  இருந்ததால் சில கட்சிகளை அழைக்க விடுபட்டு போனதாக தெரிவித்தார்.. இக்கூட்டத்தில் அதிமுக ஒன்றிய துணைச் செயலாளர் நல்லதம்பி டி ஆ எஸ் செல்வகுமார்  திமுக மாநில குழு உறுப்பினர் அன்பழகன்,, திமுக மாவட்ட கழக துணைச் செயலாளர் நாகராஜன்,  திமுக ஒன்றியச் செயலாளர்கள் மாயாண்டி, செல்வராஜ்,தேமுதிக ஒன்றிய செயலாளர்கள் கருத்தப்பாண்டி, வெள்ளைச்சாமி, மாசானம்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகரச் செயலாளர் திருப்பதி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்