வேலூரில் அனைத்து அரசு துறை பணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்..

வேலூரில் அனைத்து அரசு துறை பணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். கெளரவ தலைவர் ராஜவேலு சிறப்புரை ஆற்றினார். மாநில துணைத் தலைவர் ரமேஷ் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் அரசு தோட்டக்கலை பண்னணயில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை, பதவி உயர்வு குடும்ப நல நிதி மருத்துவப் படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. இறுதியாக மாவட்ட தலைவர் விஜயகுமார் நன்றி கூறினார்.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்