பாலக்கோட்டில் மருந்து வணிகர்கள் சங்க ஆர்ப்பாட்டம்..

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காவேரிபட்டணம் பகுதியை சேர்ந்த மருந்து விற்பனை கடைக்காரர்கள் பாலக்கோடு மருந்து வணிகர்கள் சங்க தலைவர் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் அரசு ஆன்லைன் மருந்து வணிக சட்ட அனுமதியை விரைவில் கொண்டு வர உள்ளது.

இச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டி மத்திய அரசின் கவணத்தை ஈர்க்கும் பொருட்டு ஆர்பாட்டம் நடத்தப்பட்டது இந்த ஆர்ப்பாட்டத்தில் மருந்து வணிகர்கள் சங்க பொறுப்பாளர்கள் சரவணனன், செந்தில்குமார், வெங்கடேசன், ரமேஷ், கோபால், ரத்தினவேல், பிரசன்னாவெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தி:- சிங்காரவேலு, தர்மபுரி