கீழக்கரையில் இலவச மருத்துவ முகாம்..

மதுரை வேலம்மாள் மருத்துவமனை, கீழக்கரை தெற்குத்தெரு முஸ்லீம் பொது நலச்சங்கம் மற்றும் கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் 08.07.2017 காலை 10 மணிக்கு தொடக்கி மாலை மூன்று மணி வரை இஸ்லாமியா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்எம்கே முகைதீன் இப்ராகிம் தலைமை வகித்தார் முஸ்லீம் பொது நலச்சங்கம் தலைவர் நியாஸ் முன்னிலை வகித்தார். முஹம்மது சதக் கல்லூரி பேராசியர் ஆசிப் மற்றும் எஸ்டிபிஐ மாநில செயலாளர் அப்துல் ஹமீது சிறப்புரை வழங்கினர்.

வேலம்மாள் மருத்துவ கல்லூரி தலைமை செயலக அதிகாரி பீட்டர் கென்னடி, டாக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் மருத்துவர்கள் முருகேசன் , மகேஸ்வரன் , கார்த்திக் , தீபிகா , ஜோலி மற்றும் பல சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்தனர். ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் சிகிச்சை பெற்றனர். தெற்கு தெரு ஜமாத் செயலாளர் செய்யது இப்ராகிம் மற்றும் தெற்கு தெரு முஸ்லீம் பொதுநல சங்கம் நிர்வாகிகள் சிறப்பாக ஏற்ப்பாடு செய்தனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..