Home செய்திகள் தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம்; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்..

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம்; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்..

by ஆசிரியர்

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் காலை உணவு திட்ட துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை ஆக.25 வெள்ளிக் கிழமை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட சுவாமி சன்னதி தெருவில் உள்ள நடுநிலை பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் இத்திட்டத்தை துவக்கி வைத்து மாணவ, மாணவியருடன் காலை உணவினை அருந்தினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, தென்காசி மாவட்டத்திலுள்ள 329 மையங்களில் சுமார் 15,000 மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் பணியானது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பசியோடு பள்ளிக்கு வரும் மாணவர்களை, பட்டினியாக வைத்து பாடம் சொல்லி தரக்கூடாது எனும் முதலமைச்சரின் சீரிய எண்ணத்தில் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு நமது மாவட்டத்திலுள்ள மேலநீலிதநல்லுார் மற்றும் குருவிகுளம் ஆகிய இரண்டு வட்டாரங்களில் 65 பள்ளிகளில் சுமார் 2040 மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அனைத்து அரசு பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது இடைநிற்றலின்றி அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிகளில் உணவு அருந்தி படித்து மதிய காலை உணவுடன் கூடிய சத்துணவு திட்டத்தின் மூலம் மதிய உணவையும் அருந்தி படித்து முன்னேறுவதற்கான சிறந்த திட்டம். மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தின் மூலம் உணவை வீணாக்காமல் முழுமையாக பயன்படுத்த வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பள்ளிகளின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பெருமக்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தி சிறப்பாக இத்திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 269 பள்ளிகளில் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளில் பயிலும் 7478 மாணவர்களும், 7690 மாணவிகள் என மொத்தம் 15,168 மாணவ, மாணவியர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளனர். சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் வெங்கடாசலபுரம், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா முதலமைச்சரின் காலை உணவு திட்ட துவக்க நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்து கொண்டார். புளியம்பட்டி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வாசுதேவநல்லுார் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் முதலமைச்சரின் காலை உணவு திட்ட துவக்க நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்து கொண்டார். வாசுதேவநல்லுார் சட்டமன்ற தொகுதியில் முள்ளிகுளம், அரசு தொடக்கப்பள்ளியில் வாசுதேவநல்லுார் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் முதலமைச்சரின் காலை உணவு திட்ட துவக்க நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்து கொண்டார். தென்காசி சட்டமன்ற தொகுதியில் அய்யாபுரம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனிநாடார் முதலமைச்சரின் காலை உணவு திட்ட துவக்க நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்து கொண்டார். கடையநல்லுார் சட்டமன்ற தொகுதியில் மேலகடையநல்லூர், நகராட்சி துவக்கப் பள்ளியில் கடையநல்லுார் நகர்மன்ற தலைவர் ஹபிபூர் ரகுமான் முதலமைச்சரின் காலை உணவு திட்ட துவக்க நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்து கொண்டார். ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் குறிஞ்சாகுளம், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்.எம். குமார் தலைமையில் ஆலங்குளம் நகர்மன்ற தலைவர் திவ்யா மணிகண்டன் முதலமைச்சரின் காலை உணவு திட்ட துவக்க நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், நகர்மன்றத் துணை தலைவர் K.N.L. சுப்பையா, மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் மு.முத்தையா, மாவட்டக்கல்வி அலுவலர் ஞா. அருளானந்தம், வட்டாரக் கல்வி அலுவலர் இளமுருகன், சண்முக சுந்தர பாண்டியன், தென்காசி 7வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை சி.கற்பகம், உதவி பொறியாளர் ஜெயபிரியா, உதவி செயற் பொறியாளர் க.செ.ஹஸீனா, சுகாதார அலுவலர் முகமது இஸ்மயில், தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!