Home செய்திகள் கொரோனா பாதித்தோருக்கு உற்சாகமூட்டி உதவிகள் வழங்கும் ‘ வார் ரூம் ‘ …… பொதுமக்கள் வரவேற்பு..

கொரோனா பாதித்தோருக்கு உற்சாகமூட்டி உதவிகள் வழங்கும் ‘ வார் ரூம் ‘ …… பொதுமக்கள் வரவேற்பு..

by mohan

கொரோனா தொற்றினை தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது . பேரிடரான இக்கால கட்டத்தில் கொரோனா தொற்று பாதித்த நோயாளி களுக்கு,தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் , மருத்துவ வசதிகள் , வீட்டு தனிமையில் இருக்கும் நோயாளிக்கு தேவையான மருத்துவம் , உணவு வசதிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி , பலசரக்கு , பொது சிகிச்சை முறைகள் உள்ளிட்டவை தங்கு தடையின்றி கிடைக்க கலெக்டர் அலுவலகத்தில் ‘ வார் ரூம் ‘ திறக்கப்பட்டுள்ளது . மதுரை கலெக்டர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள இந்த வார் ரூமிற்கு கூடுதல் கலெக்டர் பிரியங்கா தலைமை யில் , டி.ஆர்.ஓ ராஜசேகர் , தாசில்தார் பாண்டி கீர்த்தி, மற்றும் டாக்டர்கள் , வருவாய்த்துறை ஊழியர்கள் , செவிலியர்கள் , ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இரவு , பகல் என 3 ஷிப்டாக பணியாற்றி வருகின்றனர் . கொரோனா தொற்று பாதித்தவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அறிவுறுத்த ஒரு அணியும் , மருத்துவ மனையில் சிகிச்சை யில் இருப்போருக்கு தேவையான உதவி கள் , ஆக்சிஜன் தேவைப் படுவோருக்கு உடனடியாக கிடைக்கவும் , அதனை நிவர்த்தி செய்ய ஒரு அணியும், சிகிச்சை யில் இருக்கும் நோயாளின் நிலை குறித்து உறவினர் கள் கேட்கும்போது , அதற்கான தகவலை உடனே பெற்று , அவர்களுக்கு தெரிவிக்க ஒரு அணியும் , சமூக வலைதளத்தில் கொரோனா தொடர்பான வரும் தகவலுக்கு உடனுக்குடன் பதில் கூறுதலுக்கு என ஒரு அணியும், பொது மக்களுக்கு காய் கறி , பலசரக்கு வேண்டும் என வார்ரூமுக்கு தகவல் வந்தால் , உடனே அதற்கான ஏற்பாடு செய்தல் , வீட்டில் தனிமைப்படுத்தி கொண்ட நோயாளிக ளுக்கு தேவையான உணவு , அவர்களின் தேவைகளை நிறைவு செய்ய ஒரு அணி யும் , செவிலியர்கள் , ஆசி ரியர்கள் சேர்ந்து மாவட் டத்தில் 14 நாளுக்கு தனிமைப்படுத்தி கொண்ட நோயாளிகளை தினசரி அவர்களின் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நீங்கள் என்ன சாப்பிட் டீர்கள் , மருந்து மாத்திரை எடுத்து கொண்டீர்களா , உங்களுக்கு என்ன தேவை , வீட்டில் தனியாக இ ல் லாமல் , டிவி பாருங்கள் , நல்ல புத்தகம் படியுங்கள் , வீடியோ கேம் விளையா டுங்கள் , தேவையானால்எங்களிடம் பேசுங்கள் . காலை , மாலையில் உடற்ப யிற்சி மேற்கொள்ளுங்கள் என தன்னம்பிக்கையூட்டும் வகையில் ஊக்கப்படுத்தி இவர்களுடன் நெருக்கமாக உறையாடி , நோய் குறித்த பதட்டமே இல்லாமல் , சாதாரண நபராக இருப்ப தாக கருதும் வகையில் , கவுன்சிலிங் கொடுக்க ஒரு அணி என இப்படி 9 அணி கள் பிரிக்கப்பட்டு பணிகள் வேகமடைந்துள்ளன . கொரோனா நோயா ளிகளுக்கு நல்ல ஊக்கத் தையும் , நோய்க்கு அப்பால் உற்சகத்தையும் கொடுத்து வரும் இந்த அணி பணியா ளர்களுக்கு மதுரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது….. போனில் அழைத்தால் உதவி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ‘ வார் ரூம் ‘ உதவிகளை பெற , டோல் ப்ரீ எண் அறிவிக்கப்பட்டுள் ளது . இதன்படி ‘ 1077 ‘ என்ற எண்ணை அழைக்கலாம் . அல்லது வாட்ஸ்அப் எண் , ‘ 95971 76061 ‘ என்ற எண்ணி லும் தொடர்பு கொள்ளலாம் . பொது போனில் , ‘ 0452 -2530104 , 2530106 , 2530107 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது . முன்பு கட்டுப்பாட்டு அறை என இருக்கும் . அதில் ஒன் றிரண்டு பேர் அமர்ந்து வரும் தகவலை பதிவு செய்யம் பணியையே செய்வர் . இப்படி அணி அணியாக அமர்ந்து , தேவையான உதவிகள் செய்ததில்லை . ஆனால் , புதிய அரசு ஏற்பாடு செய்துள்ள பல்வேறு துறை ஊழியர்களை கொண்ட இந்த 9 அணிகள் , தேவையான அனைத்து உத விகளையும் உடனுக்குடன் இரவு பகல் பாராது வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது . இங்கு நடைபெறும் அனைத்து பணிகளும் உடனுக்குடன் தமிழக அரசின் தலைமை ‘ வார் ரூம் ‘ அனுப்பி வைக்கப்படுவதால் , தொய்வின்றி மக்களுக்கு சேவை கிடைக்கிறது .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com