
மதுரை செயின்ட் மேரீஸ் சர்ச் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை காரில் வந்த மர்ம கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியது. சாலையில் நடந்து சென்ற பெண்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த காவலர்கள் ஓடிவந்தனர். அதற்குள் இளைஞனின் தலையை தனியாக எடுத்து சென்று செயின்ட் மேரீஸ் தேவாலயம் முன்பு வைத்து விட்டு மர்ம கும்பல் தப்பியது.
தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் இணை ஆணையர் சிவபிரசாத் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்தில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கைப்பற்றினர்.
இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர் அதில் தலை துண்டான வாலிபர் மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த குமரேசன் மகன் முருகானந்தம் என்றும் அவர் மீது பல்வேறு கொலை கொள்ளை வழக்குகள் இருப்பதாகவும், மற்றொரு வாலிபர் கீழ்மதுரையை சேர்ந்த முனியசாமி பயங்கர வெட்டு காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே மதுரை பைபாஸ் சாலை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரே பயங்கர ஆயுதங்களுடன் கார் ஒன்று நின்றது. போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையில் பரபரப்பு மிகுந்த சாலையில் தலையை தனியாக துண்டித்து சர்ச் வாசலில் வைத்து சென்றனர் கொலையாளிகளை சர்ச்சை வாசலில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தேடி வருகின்றனர். மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்து வருகின்றனர். தலை துண்டிக்கப்பட்ட வாலிபர் மீது மாதாரில் பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்துள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.