Home செய்திகள் தமிழகம் முழுவதும் கண் கருவிழி கருவி பதிவின் மூலம் ரேசன் பொருட்களை விநியோகம் செய்யப்படும்- மதுரை விமான நிலையத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டி.

தமிழகம் முழுவதும் கண் கருவிழி கருவி பதிவின் மூலம் ரேசன் பொருட்களை விநியோகம் செய்யப்படும்- மதுரை விமான நிலையத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டி.

by mohan

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.அப்போது செய்தியாளர்கள் தொடர் மழையால் திறந்த வெளி நெல் கிடங்கில் பாதிப்படைகிறது இது குறித்த கேள்விக்கு இதற்காக கூடுதலாக இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் ஒத்திக்கு வாங்கி, நபார்டு வங்கியிடம் நிதி உதவி கேட்டுள்ளோம் இந்த திட்டத்தை இந்த ஆண்டு செயல்படுத்தலாம் என உள்ளோம்.தொடர்ந்து அதிகளவு ரேஷன் அரிசி கடத்தப்படுவது குறித்த கேள்விக்குகடந்த இருபத்தி ஆறாம் தேதி சென்னையில் துறை சம்பந்தமான காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.அதில் இனிமேல் கடத்தல் அரிசி எங்கு சென்றாலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் தமிழகத்தில் 256 குடோன் உள்ளது இந்த குடோனில் இருந்து எந்த கடைக்கு செல்கிறது என்பது தெரியாது.எனவே 256 குடோன்களுக்கும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் செல்ல கோடு நம்பர் வழங்க உள்ளதாகவும் இந்த குடோனில் இருந்து கடத்தப் படுகிறது என்பதை கண்டறிவதற்காக நடைமுறையில் பயன் படுத்த உள்ளோம்.புதிதாக அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களிலும் புதிதாக DSPகள் கொண்ட புதிய யூனிட் சிபிசிஐடி குழு அமைக்க முதலமைச்சர் அனுமதி தந்துள்ளார். யார் அரிசி கடத்தலில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.ரேஷன் அரிசியில் வாங்க வரும் பொதுமக்கள் கைரேகை பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து கேள்விக்கு சில இடங்களில் இதுபோன்ற பிரச்சனைகள் உள்ளது வயல்வெளியில் வேலை செய்யும் மக்கள் கைரேகை பதிவு செய்யவில்லை என குற்றச்சாட்டு உள்ளது இந்தியாவில் பல மாநிலங்களில் கண் கருவிழி மூலமாக பொருள்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் முதலமைச்சர் கண் கருவிழி கருவி மூலமாக பொருள்கள் வாங்க ஏற்பாடு செய்ய உள்ளோம் செய்த பிறகு மக்களுக்கு நல்ல பயன்தரும் முறையில் இருந்தால் தமிழகம் முழுவதும் கண் கருவிழி கருவி மூலம் பொருட்களை வாங்க முடிவு செய்யப்படும் என அரசக்கரபாணி கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com