மதுரை அருகே,திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், அகத்தர உத்தரவாத மையம் மற்றும் நிறுவன கண்டுபிடிப்பு கவுன்சில் மற்றும் மதுரை மாவட்ட தொழில் மையம் இணைந்து ஆர்வமுள்ள இளைஞர்களுக்கான தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் நிதி உதவி பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற்றது. கருத்தரங்கம் இறை வணக்கத்துடன் துவங்கப்பட்டது. அகத்தர உத்தரவாத மையம் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ் பாபு வரவேற்புரை ஆற்றினார். முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமை உரை ஆற்றினார். துணை முதல்வர் முனைவர் பார்த்தசாரதி வாழ்த்துரை வழங்கினார்.செயலர் சுவாமி வேதானந்த மற்றும் குலபதி சுவாமி அத்யாத்மனந்த ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கின் சிறப்பு விருந்தினர் மதுரை மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் ராமலிங்கம்சிறப்புரை ஆற்றினார். இன்றைய இளைஞர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப மத்திய மற்றும் மாநில அரசு உதவியுடன் தொழில் தொடங்கும் வாய்ப்புகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மாணவர்கள் தங்களது வேலைவாய்ப்பு மற்றும் தொழில் தொடங்குவது சம்பந்தப்பட்ட சந்தேகங்களை வினாக்களாக கேட்டு அதற்குரிய விடைகளை அறிந்து கொண்டனர். நிறுவன கண்டுபிடிப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் நன்றி உரையாற்றினார். கருத்தரங்கம், நாட்டுப் பண்ணுடன் இனிதே நிறைவுற்றது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.