தென் மாவட்ட மத்திய அரசு அலுவலகங்களில் இடம் பெற்றுள்ள இந்தி பெயர் குறித்து ஆய்வுமதுரையிலிருந்து செல்லும் அலுவல் குழுவிற்கு கார்களில் இந்தி எழுத்துக்கள் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.மதுரை மாவட்டம் மதுரை விமானநிலையைத்திற்குபாராளுமன்ற அலுவல்சாரா குழு துணைத்தலைவர் பரத் திரு ஹரி மகதப் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர் மற்றும் (மாநிலங்களவை) ராஜ்ஜிய சபா எம்பிக்கள் பிரதிப் குமார், சுசில் குமார் குப்தா இருவர் உள்ளிட்ட 11 பேர் கொண்ட எம்பிக்கள் குழுவினரும்.மத்திய செயலர் அதிகாரிகள் அளவில் அமைந்துள்ள துணை குழுவில் தர்மராஜ் கார்திக் IAS தலைமையில் இந்தி ஆய்வாளர் உள்பட 5 பேர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் மும்பையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தனர்.மதுரை விமான நிலையம், ரயில் நிலையம்,சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சிக்ரி, ராமநாதபுரம் மாவட்டம் உச்ச புளி, உள்ளிட்ட தென் மாவட்ட மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள இந்தி பெயர் பலகை, தகவல் பலகை, மற்றும் அலுவலக முகப்புகளை ஆய்வு செய்ய உள்ளனர்.இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் டுவிட்டர் செய்தியில் இந்தி அலுவல் மொழி குறித்து ஆய்வு செய்ய வருகை தருவது தேவையற்றது. வேண்டுமானால் தென் மாவட்டங்களில் விருந்தோம்பல் செய்ய விருந்தினராக வருகை தெரிந்தால் சிறப்பாக வரவேற்க தயராக உள்ளோம் என குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.