மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலை போடி லயன் மேம்பாலம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அதன் பக்கத்தில் உள்ள காலி இடத்தில் கருவேல முள்கள் அடர்ந்து காணப்பட்டு வந்ததில் சில மர்ம நபர்கள் அதில் மரத்தூளை போட்டு தீயிட்டு சென்றுள்ளனர்.இதனால் அங்கு தீயானது மலமலவென எரிய துவங்கி அடுக்குமாடி குடியிருப்பு வரை சென்றதை அடுத்து குடியிருப்பு காவலாளி உடனே மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்ததை சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு வீரர்கள் மளமளவென எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர்.தீப்பற்றிய இடத்திற்கு மேலே உயர் மின் அழுத்த மின் வயர்கள் சென்று கொண்டிருந்ததும் கருகி சேதமடைந்தது. தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தவிர்க்கப்பட்டது.இதேபோல் கருவேலம் முட்களின் மீது அடிக்கடி மர்ம நபர்கள் தீயிட்டு செல்வதால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடியிருப்புவாசிகள் வலியுறுத்துகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.